60 வயதானாலும் 20 வயதுக்காரரை போல் ஆக்டிவாக இயங்குவதற்கு இப்போதே சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் 60 வயதில் எப்படி இருப்போமோ என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். அது என்ன 6 பழக்கங்கள்? தெரிஞ்சுக்கோங்க.
60 வயதிலும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இது தசைகளை வலுப்படுத்தவும், எலும்பு அடர்த்தியைப் பராமரிக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, நீச்சல் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் இதய ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியையும் தரும். லேசான பளு தூக்கும் பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்தவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
26
சீரான மற்றும் சத்தான உணவு :
உங்கள் வயதிற்கு ஏற்ற சத்தான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் அதிக உப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மலச்சிக்கலைத் தடுத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பால் பொருட்கள் மற்றும் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் மூலம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், மீன், கோழி மற்றும் முட்டைகள் போன்றவை தசை இழப்பைத் தடுத்து, உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளை மேம்படுத்தும்.
36
போதுமான தூக்கம் :
60 வயதில் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் நல்ல தூக்கம் மிகவும் அவசியம். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவது உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தூங்குவதற்கு முன் புத்தகம் படித்தல், மெல்லிய இசை கேட்டல் அல்லது சூடான குளியல் எடுத்தல் போன்றவை நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். தூங்குவதற்கு முன் காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்கவும். இவை தூக்கத்தை பாதிக்கும், உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
சமூக ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஒரு புதிய மொழியைக் கற்கவும், அல்லது ஒரு புதிய திறமையைக் கற்கவும் முயற்சியுங்கள். இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். தன்னார்வத் தொண்டு பணிகளில் ஈடுபடுங்கள் இது உங்களுக்கு மனநிறைவையும், சமூக நிகழ்வுகளில் பங்கேற்ப்பதன் மூலம் சமூக தொடர்புகளும் அதிகரிக்கும். பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும். மன அழுத்தத்தைக் குறைக்க தினந்தோறும் தியானம், யோகா அல்லது சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளங்கள்.
56
வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் :
60 வயதில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மிகவும் முக்கியம். இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இரண்டையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். தொடர் பரிசோதனைகள் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்வதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தையும், பற்க்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். வயதுக்கு ஏற்ற தடுப்பூசிகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை செலுத்திக் கொள்ளவும். வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற உதவும்.
66
நேர்மறை மனப்பான்மை மற்றும் மனநிறைவு :
60 வயதில் நேர்மறையான மனப்பான்மையுடன் இருப்பது மிகவும் முக்கியம். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுகுங்கள். ஒவ்வொரு நாளும் நடந்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும். அதிகம் சிரிக்கவும், நகைச்சுவையான விஷயங்களை அனுபவிக்கவும். உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும். உங்கள் உடல் மற்றும் மனதை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது நிபுணர்களிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்.