குழந்தைக்கு காது குத்த போறீங்களா? பெற்றோர் தெரியாம பண்ற தவறுகள் இதுதான்

Published : May 30, 2025, 01:29 PM IST

குழந்தைகளுக்கு காது குத்தும் போது பெற்றோர்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Safety Tips to Consider When Getting Your Baby's Ears Pierced

காது குத்துதல் என்பது இந்தியாவில் ஒரு கலாச்சாரமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை தலைமுறை தலைமுறைகளாகவே பின்பற்றி வருகின்றோம். காது குத்துதல் கலாச்சாரம் அடையாளமாக இருப்பதால் குழந்தையாக இருக்கும்போதே காது குத்துவது மிக முக்கிய நிகழ்வாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகளுக்கு காது குத்தும் போது பெற்றோர்கள் கண்டிப்பாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
குழந்தைகளுக்கு காது குத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. 6 மாதத்திற்கு முன் காது குத்துதல்:

சில வீடுகளில் குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்திற்குள் காதுகுத்தி விடுவார்கள். ஆனால் அப்படி செய்வது நல்லதல்ல. ஏனெனில், அந்த மாதத்திற்குள் குழந்தைகளின் உடலில் போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. இதனால் தொற்றுப் போன்ற பிரச்சனைகள் அவர்களை தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி அனைத்தும் போட்ட பிறகு அதாவது 10 மாதங்கள் வரை காது குத்துவதை தள்ளி போட வேண்டும்.

36
2. கையுறைகள் கட்டாயம் அவசியம்:

குழந்தைக்கு காது குத்தும் நபர் கண்டிப்பாக கையுறை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுபோல காது குத்துக்கு பயன்படுத்தப்படும் ஊசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சுத்தமானதா? என்பதைப் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கூடவே முதலுதவி பெட்டியும் கண்டிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

46
3. காது குத்தும் இடம்:

குழந்தைக்கு காது குத்தும் முன் சரியான இடத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் தவறான இடத்தில் காது குத்தப்பட்டால் காது இறுகிவிடும்.

56
4. இதில் கவனம் தேவை!

குழந்தைக்கு காது குத்திய பிறகு காயம் மற்றும் வலி முற்றிலுமாக ஆறும் வரை அவர்களை அதிகம் விளையாட விட வேண்டாம் மற்றும் வெளியில் செல்ல அனுமதிக்கவும் வேண்டாம். ஒருவேளை அவர்களை விளையாட அனுமதித்தால் கவனமாக இருங்கள்.

66
5. மருத்துவரின் ஆலோசனை:

குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா? என்று மருத்துவர்கள் தான் நன்றாக அறிந்திருக்க முடியும் எனவே காதுகுத்து முன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories