உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பழங்கள், காய்கறிகள் தெரியுமா..? மீறினால் உடலுக்கு நஞ்சாக கூட மாறலாம்....

First Published Aug 17, 2022, 10:50 AM IST

Kitchen Tips: எந்தெந்த உணவு பொருட்களை வீட்டு ஃபிரிட்ஜில் எத்தனை நாள்கள் வைக்க வேண்டும், என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்முடைய உடலும், ஆரோக்கியமும் கெட்டு விடும். 

இன்றைய சூழ்நிலையில் வீட்டு உபயோக சாதனங்களில் ஒன்றான ஃபிரிட்ஜின் பயன்பாடு இல்லாத வீடு குறைவுதான். வீட்டில் இருக்கும் பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுப் பொருட்கள் என எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம். எனவே, வீட்டு ஃபிரிட்ஜில் இந்த உணவு பொருட்களை இனி வைக்க வேண்டாம்.  

 மேலும் படிக்க...Suriyan Peyarchi 2022: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளின் வாழ்கை இன்று முதல் சூப்பராக இருக்கும்

Kitchen Tips:

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும்.

Kitchen Tips:

தேன், காபிக்கொட்டை:

சூடான பொருள்களை அப்படியே ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. அதேபோன்று, இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேன், காபிக்கொட்டை, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருள்களையும் வைக்கக்கூடாது. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.

 மேலும் படிக்க...Suriyan Peyarchi 2022: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளின் வாழ்கை இன்று முதல் சூப்பராக இருக்கும்

பால், வெண்ணெய்:

பால், வெண்ணெய் ஆகிய பால் பொருள்களையும் ப்ரீசரில் வைக்க வேண்டும். அதேநேரம், தயிரை அதிக நேரம் வைக்கக் கூடாது.  

Kitchen Tips:

சமைக்காத இறைச்சி:

சமைக்காத இறைச்சிகளை கடையில் வாங்கி உடனே சமைப்பது நல்லது. இவற்றை நீண்ட நேரம் ஃபிரிட்ஜில் வைப்பதால் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை வைக்க நேர்ந்தால் காய்கறிகளின் அருகில் வைக்க வேண்டாம். பாலிதீன் கவரில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.  

Kitchen Tips:

கெட்ச்சப்:

கெட்ச்சப் எனும் சுவையூட்டும் கூழ்கள் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.

Kitchen Tips:

முட்டை: 

முட்டைய பிரிட்ஜில்வைக்க வேண்டாம். ஏனேன்றால் முட்டையின் மேல் பாக்ட்டீரியாக்கள் இருக்ககூடும். இவற்றை பிரிட்ஜில் வைப்பதன் மூலாம் பாக்ட்டீரியாக்கள் வாழ்வதற்க்கான சூழலை நாமே உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்

 மேலும் படிக்க...Suriyan Peyarchi 2022: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளின் வாழ்கை இன்று முதல் சூப்பராக இருக்கும்

Kitchen Tips:

தக்காளி: 

காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.  

வாழைப்பழம்: 

ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். எனவே, திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

வெங்காயம்:

வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இவைகள் குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் இவற்றின் மணம் மணக்கும் படி மாற்றிவிடும்.

மொத்தத்தில், சமைத்த பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். சிலர் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிறகு சூடு செய்து சாப்பிடுவார்கள். அது உடல்நலத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 

click me!