பாதாம் மற்றும் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்:
பாதாம் மற்றும் திராட்சையை ஊறவைத்தோ, தோல் நீக்கியோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம், பாதம் பருப்பின் சக்தியை முழுமையாக நீங்கள் பெற வேண்டுமாயின் அதனை தினமும் சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பு சாப்பிடுவது வீண் வாத மற்றும் பித்த தோஷங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது . பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உடல் பலவீனம், உடல் பருமன், நீரிழிவு நோயின் சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.