இந்த சங்கானது, வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கும். சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும், மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறி வருகின்றனர்.