Vastu Tips: விளக்கை அணைக்கும் போது இந்த தவறை மட்டும் தெரியாமல் கூட செய்யாதீங்க, கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

First Published Aug 17, 2022, 6:00 AM IST

Vastu Tips- Vilakku Malaiyetrum Murai in Tamil: வீடுகளில் தினமும் பூஜை அறையில், தீபம் ஏற்றி வழிபடுவது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு விளக்கை மலை ஏறும்போதும் கவனமாக அணைக்க வேண்டும்.

Vastu Tips

வீடுகளில் தினமும் பூஜை அறையில், தீபம் ஏற்றி வழிபடுவது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு விளக்கை மலை ஏறும்போதும் கவனமாக அணைக்க வேண்டும்.பொதுவாகவே எரிந்து கொண்டிருக்கும் விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. தீபத்தை அணைத்தல் என்ற வார்த்தையை அமங்கல சொல்லாக சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. கையால் வீசியும் அணைக்க கூடாது. புஸ்பத்தை நெருப்பில் கருகவிடக்கூடாது. 

மேலும் படிக்க....Vastu Tips:வாரத்தில் ஒருமுறை கல் உப்பு பரிகாரம் இப்படி செய்தால் போதும், லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும்
 

Vastu Tips:

எனவே, தீபத்தை குளிர வைக்கும் போது அதை எந்த முறைப்படி எப்படி குளிர வைக்க வேண்டும் என்பதைப் ஆன்மீக ரீதியான தெரிந்து வைத்து கொள்ளுங்கள். வீட்டில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபடுவதை சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Vastu Tips:

அதேபோன்று, விளக்கை மலையேற்றும்போது, விளக்கை அணைக்கிறேன் என்று சொல்லாமல் விளக்கை மலையேற்றுகிறேன் இந்த இரு வார்த்தைகளை வீட்டில் உபயோகிப்பதால் மங்கலப் சொல்லாக கருதப்படுகிறது.தீபத்தை குளிர வைப்பதற்கு முன்பாக மகாலட்சுமியை மனதார நினைத்து இன்றுபோல் என்றும் வீடுகளில் வெளிச்சம் பிரகாசமாக மகாலட்சுமி ஜோதி வடிவில் எறிய வேண்டும், என்று  வேண்டுகோளோடு  நமஸ்காரம் செய்துவிட்டு தீபத்தை குளிர வைக்க வேண்டும்.  

lamp

 
அடுத்தபடியாக தீபத்தை குளிர வைப்பதற்கு கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளை கொண்டு அமர்த்தி விடக்கூடாது. வெள்ளி குச்சு பயன்படுத்துவது சிறந்த ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. நீங்கள வெள்ளி குச்சில் திரியை உள்பக்கம் இழுத்து விட்டால், எண்ணெயில் தீபம் குளிர்ந்து விடும். இதை நீங்கள் எப்போதும் உங்கள் பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள். 

Vastu Tips:

ஆனால் இந்த வெள்ளி குச்சை வாங்கி பூஜையறையில் வைக்க முடியாதவர்கள், இனிப்பு சுவை நிறைந்த கற்கண்டை வைத்து இந்த தீபத்தை குளிர வைப்பது பல்வேறு பலன்களைத் தரும். வீட்டில் எப்போதும் கல்கண்டு வைத்திருப்பது மிக மிக நல்லது.

இல்லை என்றால், மாதுளை பழ குச்சி, நெல்லிக்காய் குச்சு, மருதாணி குச்சி இப்படி இந்த மரத்திலிருந்து சிறிய குச்சிகளை உடைத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.வீட்டில் விளக்கு வைத்த பின்னர் ஊனமுற்றவர்களுக்கு அல்லது ஏழை குழந்தைகளுக்கு நீங்கள் உங்களால் முடிந்த பொருட்களை தர்மம் செய்தால் உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கும். செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். 


மேலும் படிக்க....Vastu Tips:வாரத்தில் ஒருமுறை கல் உப்பு பரிகாரம் இப்படி செய்தால் போதும், லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும்

Vastu Tips:

விளக்கு வீட்டில் உள்ள இருளை நீக்கக்கூடிய தீப சுடர் அல்லவா..?. ஆகவே அந்த தீபம் குளிர்ந்த பிறகும், பிரகாசமாக மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய இந்த குறிப்பை எல்லோரும் பின்பற்ற வேண்டும். 

மேலும் படிக்க....Vastu Tips:வாரத்தில் ஒருமுறை கல் உப்பு பரிகாரம் இப்படி செய்தால் போதும், லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும்
 

click me!