மழை காலங்களில்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்!

First Published Nov 3, 2022, 2:49 PM IST

பருவமழை தற்போது துவங்கியுள்ள நிலையில், கால மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல் மற்றும் சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. உணவினால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட மழைக்காலங்களில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் இது குறித்த தகவல்கள் இதோ...
 

கோடை வெய்யில் மக்களை வாட்டி வதக்கிய நிலையில், பருவ மழை துவங்கியதால்... பூமி குளிர்ந்து, சூடு தணிந்து மக்கள் சில்லென்ற காற்றை அனுபவித்து வருகிறார்கள். ஒருபுறம் பருவ மழை, மக்களை நிம்மதியடைய வைத்தாலும், திடீர் பருவ நிலை மாற்றத்தால்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், அஜீரண கோளாறு, பாக்ட்டீரிய தொற்று போன்ற சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே... உணவே மருந்து என்கிற பழமொழிக்கு ஏற்ப, உணவின் மீது மக்கள் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். எந்த உணவுகளை கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கீரை வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக வெந்தயக் கீரை, முருங்கை கீரை, பாலக்கீரை, பருப்பு கீரை, முளைக்கீரை, அரைக்கீரை போன்ற கீரை வகைகளில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தாலும், மழை காலங்களில் இவை அஜீரண கோளாறை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே போல்  மண்ணில் விளையக்கூடிய முட்டைக்கோஸ், காலிஃபிளவர், இலைக் காய்கறிகளை மழைக் காலத்தில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மழையின் காரணமாக ஏற்படும் ஈரப்பததால் கிருமி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 80-வது மணி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!
 

செயற்கை குளிர்பானங்கள்:

பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். மழை காலங்களில், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம், எனவே, இது போன்ற பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மைதா 

முழு கோதுமை மாவை விட மைதாவால் செய்யப்படும் உணவுகள் சுவையாக இருந்தாலும், இது ஆரோக்கியமற்றது. மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் மழை காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் மந்த தன்மையை ஏற்படுத்துவதோடு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ஹன்சிகா?... அவரே சொன்ன ‘நச்’ பதில்

வறுத்த உணவுகள்:

மழை காலத்தில், சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. தெருவோர உணவு விற்பனையாளர்களிடமிருந்து, பக்கோடா, பஜ்ஜி போன்ற வறுத்த பொருட்களை மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டும். இவை சுகாதாரமற்ற முறையில் செய்யப்பட்டிருந்தாலோ, எண்ணெய் தரமில்லாமல் இருந்தாலோ, இதுவே பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்:

தெருவில் வெட்டியே விற்பனை செய்யப்படும் அன்னாசி, தர்பூசணி போன்ற பழங்கள் அல்லது தெரு உணவு விற்பனையாளர்களிடமிருந்து வெள்ளரி போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை திறந்த வெளியில் வைக்கப்படுவதால், மாசு படுவதோடு உடல்நலத்திற்கும் கேடாக அமைய கூடும்.

அஜித் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா? வெளிநாட்டில் போனியாகாத துணிவு.. வாரிசு பட பிசினஸில் பாதிகூட கிடைக்கலயாம்

மழைக்காலத்தில் கடல் உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை விற்பனைக்கு முன் எவ்வளவு நாட்கள் சேமிக்கப்படுகின்றன என்பது யாருக்கும் தெரிவது இல்லை.
 

புளித்த உணவுகள்:

புளிப்பு தன்மை கொண்ட உணவுகள், ஊறுகாய் போன்ற உணவுகள் மழைக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவை செரிமான செயல்முறையை பாதிக்கின்றன.

bharathi kannamma : என்னது பாரதிக்கும்..வெண்பாவுக்கும் திருமணம் ஆகிடுச்சா? வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்
 

பருப்பு வகைகள்:

செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும் சில பருப்பு வகைகளை தவிர்ப்பது முக்கியம், மசூர் மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றை தவிர்த்து, பாசி பருப்பு, துவரை போன்ற பருப்புகள் எடுத்து கொள்வது நலம்.

தயிர் 

தயிர் ஒரு புரோபயாடிக் (நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் ஒன்று) என்றாலும், சளி மற்றும் இருமலைத் தடுக்க மழைக்காலங்களில் அதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்காதீர்கள்

மோடியை பாராட்டிய விஷால்... ஒரே டுவிட்டில் நோஸ் கட் செய்த பிரகாஷ் ராஜ்

மாம்பழங்கள்  

பருவமழைக்குப் பின், கிருமிகள் மற்றும் பூச்சிகள் மாம்பழங்களை மாசுபடுத்தத் தொடங்குகின்றன. எனவே, முதல் மழைக்குப் பிறகு மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

click me!