உலக பணக்காரர் மனைவி என்றாலும் ஒரு கணக்கில்லையா? தலை சுற்ற வைக்கும் நீதா அம்பானியின் ஹேண்ட் பேக் விலை!!

First Published | Jun 24, 2023, 11:19 AM IST

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பயன்படுத்திய ஹேண்ட் பேக் விலையில், நாம் ஒரு பங்களாவையே வாங்கிவிடலாமாம். கோடிக்கணக்கில் மதிப்புள்ள அந்த பேக்கில் அப்படியென்ன ஸ்பெஷல் என்பதை இங்கு காணலாம். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீதா அம்பானி. இவர் உலகிலேயே அதிக விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பவர். தன்னுடைய 59 வயதிலும் நீதா புதிய பேஷன் ட்ரெண்டுகளில் தன்னை ஈடுபடுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். கோடீஸ்வரர் மனைவியின் என்பதால் அவர் பயன்படுத்தும் பொருள்களும் கோடிக்கணக்கில் மதிப்புடையவை தான். குறிப்பாக அவர் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் எப்போதும் கோடிகளில் தான் இருக்கும். 

குறிப்பாக நீதா அம்பானி பல நிகழ்வுகளில் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்கை எடுத்துச் செல்வதைக் காணலாம். அண்மையில் கூட நீதா அம்பானி ஒரு வித்தியாசமான பேக்கை பிரபல நிகழ்வுக்கு கொண்டு வந்திருந்தார். சமீபத்தில் நீதா அம்பானி, தன் கலாச்சார மையம் (NMACC) நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் வித்தியாசமான ஹேண்ட் பேக் வைத்திருந்தார். இந்தப் பையின் விலை உங்களை வியக்கவைக்கும் என்பது உறுதி.

Tap to resize

அந்த நிகழ்ச்சியில், அவர் Faubourg Birkin 20 ஒயிட் மேட் என்ற ஹேண்ட் பேக் எடுத்துச் சென்றார். காண்பதற்கு எளிமையான தோற்றமுடைய இந்த ஹேண்ட் பேக்கின் விலையில், நீங்கள் ஆடம்பரமான 1 பங்களாவை கூட வாங்கலாம். ஆமாங்க.. எளிமையான வடிவமைப்புடன் இருந்தாலும் இந்த பேக் மிகவும் விலையுயர்ந்தது. 

ஹேண்ட் பேக்கின் வெளிப்புறம் ஐந்து வெவ்வேறு எழுத்துகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தனித்துவமான தரம் காரணமாக இந்த ஹேண்ட் பேக் மிகவும் பிரபலமானது. ஆனால் விலை தான் கொஞ்சம் மலைப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்த பையின் விலை 4,00,000 அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ.3.2 கோடி. இது மட்டுமல்ல நீதா அம்பானி பயன்படுத்தும் 'ஃபெண்டி' மற்றும் 'செலின்' முதல் 'ஹெர்ம்ஸ்' வரை எல்லாமே விலையுயர்ந்தவை தாம். 

சில நாட்களுக்கு முன்பு கூட பாலிவுட் நடிகைகள் கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூருடன் நீதா அம்பானி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், நிதா அம்பானி ஹெர்ம்ஸ் பிராண்டின் இமயமலை பர்கின் பேக் எடுத்துச் சென்றார். அதில் வைரம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. அதுவும் 240 வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா! இத்தனை லட்சத்துக்கு புடவையா? நீதா அம்பானி உடுத்திய உலகின் விலையுயர்ந்த புடவை.! அப்படி என்ன சிறப்பு

Latest Videos

click me!