அபுதாபியை அதிர வைத்த கேரள தொழிலதிபர் வீட்டு திருமணம்..! வைர நகைகளால் ஜொலித்த அந்த மணப்பெண் யார் தெரியுமா?

First Published | Jun 12, 2023, 10:13 AM IST

கேரள தொழிலதிபர் யூசுஃபலியின் குடும்பத் திருமண விழாவில் துபாய் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  

லுலு மால் குழும சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியவர் UAE-ஐ தளமாக வைத்திருக்கும் கேரள தொழிலதிபர் யூசுஃபலி. இவர் தொழிலதிபர் மட்டுமல்ல, , அரசியல் தலைவர்களுக்கு உற்ற தோழர். இவருடைய சகோதரரின் மகள் திருமணம் கடந்த ஞாயிரன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.  அபுதாபியில்  நடந்த ஆடம்பரமான இந்த இந்திய திருமண விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  

முன்னணி தொழிலதிபரும், லுலு குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியின் சகோதரனான அஷ்ரப் அலியின் மகள் டாக்டர் ஃபஹிமா அஷ்ரப் அலிக்கு முபீன் முஸ்தபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மலர்களின் மழையில் நனைந்தபடி மணமக்கள் திருமண விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் மதிமயங்கும் இசைக் கச்சேரி நடந்தது. கிட்டத்தட்ட 4-அடுக்கு திருமண கேக், தடுபுடலான விருந்து என திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திருமண விழாவை சிறப்பித்தார். 

Tap to resize

இந்த திருமண விழாவில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் திலீப், டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, காவ்யா மாதவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக விருந்தினர் பட்டியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். 

இதையும் படிங்க: அடேங்கப்பா! இத்தனை லட்சத்துக்கு புடவையா? நீதா அம்பானி உடுத்திய உலகின் விலையுயர்ந்த புடவை.! அப்படி என்ன சிறப்பு

மணமகள் டாக்டர் ஃபாஹிமா வைர நகைகளை மட்டும் தான் அணிந்திருந்தார். வைர நகைகளின் ஜொலிப்பில் அவரது தோற்றம் இன்னும் அழகாக இருந்தது. இளஞ்சிவப்பு, அதிக அளவில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா அணிந்திருந்தார். மணமகன் முபீன் முஸ்தபா, தலைப்பாகை, பெல்ட்டுடன் கூடிய பழுப்பு நிற ஷெர்வானி அணிந்திருந்தார். இந்த திருமண விழா கொண்டாட்டம் கிட்டத்தட்ட நான்கு நாள்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அம்பானி வீட்டு மூத்த மருமகளா இவங்க? ஆடம்பரத்திற்கு அளவேயில்லை.. பல கோடிக்கு நெக்லஸ்? இன்னும் இருக்கு!

Latest Videos

click me!