உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவர்கள் மும்பையில் இருக்கும் அன்டிலியா எனும் வீட்டில் வசித்து வருகின்றனர். நீதா அம்பானி அண்மையில் கலாச்சார மையம் ஒன்றினை திறந்து வைத்தார். இந்த மைய திறப்பு விழாவில் ஹாலிவுட் நடிகை ஜெண்டயா, ஸ்பைடர் மேன் புகழ் நடிகர் டாம் ஹாலண்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வரை பலர் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நீதா அம்பானி தன்னுடைய புடவைகள், நகைகள் ஆகியவற்றுக்கு பிரபலமானவர். அவரது பிரபலமான ஆடைகளில் இளஞ்சிவப்பு நிற சேலையை ஒன்று குறிப்பிடத்தகுந்தது. ஏனென்றால் இது உலகின் மிக விலையுயர்ந்த புடவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முன்னாள் ராஜ்யசபா எம்பி பரிமல் நத்வானியின் மகன் திருமண விழாவில் பிரதமர் மோடி, நீதா அம்பானி உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதா அம்பானி அணிந்திருந்த இளம்சிவப்பு நிற புடவை சாதாரணமானது அல்ல. பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது.
வடிவமைத்தவர்- சிவலிங்கம் - விலை ரூ.40 லட்சம்
சென்னை சில்க்ஸ் இயக்குனர் சிவலிங்கம் வடிவமைத்த அந்த இளம்சிவப்பு நிற புடவையின் விலை ரூ.40 லட்சமாகும். இந்த புடவையை 35 காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் கைவினைஞர்கள் மெனக்கெடலுடன் நெய்துள்ளனர். மரகதம், புஷ்பராகம், ரூபி, விலையுர்ந்த முத்துக்கள் வைத்து இந்த புடவை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த புடவைக்கு மேட்சிங் ப்ளவுஸ் அணிந்திருந்தார். அதுவும் நுட்பமான வேலைபாடுகள் உடையது. அதில் இறைவனின் ஓவியம் பொறிக்கப்பட்டிருந்தது.