நம் நாட்டில் மட்டுமின்றி ஆசியாவிலேயே பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயர் முன்னிலையில் உள்ளது. முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது வாரிசுகள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகியோர் தங்களது செயல்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவர். அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வதில் மக்களுக்கும் ஆர்வம் உள்ளது. தற்போது இஷா அம்பானியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.