இந்த புடவை பார்க்கதான் எளிமையாக தெரியும், ஆனால் இதில் தங்க ஜரிகை வேலைகள் செய்யப்பட்டிருந்தது. பிளவுஸில் விலையுயர்ந்த ஓவிய வடிவமைப்பு இருந்தது. இந்த புடவையை சென்னை சில்க்ஸ் இயக்குனர் சிவலிங்கம் வடிவமைத்துள்ளார். புகழ்பெற்ற காஞ்சி பட்டு, மெல்லிய தங்க ஜரிகைகள் இந்த சேலையின் எம்பிராய்டரிக்கு பயன்படுத்தப்பட்டன. எமரால்டு, ரூபி, புஷ்பராகம், முத்து ஆகிய கற்கள் பதித்து இந்த புடவை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 36 கைவினைஞர்கள் இணைந்து இந்தப் புடவையை நெசவு செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முழுவதும் கண்ணும் கருத்துமாக இந்த புடவை வடிவமைக்கப்பட்டது.