தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா நீங்கள்- ஜாக்கிரதையாக இருங்கள்..!!

First Published | Feb 28, 2023, 11:53 PM IST

பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச்சாயத்தில் காட்மியம், ஈயம் மற்றும் அலுமினியம் போன்ற கூறுகள் முக்கிய சேர்க்கையாக உள்ளன. இது உடலுக்கும் சருமத்துக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

lipstick

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது. அதனால் முடிந்தவரை அனைவரும் அழகு பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நம்மில் பலர் நம்மைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்காக ஒப்பனை செய்துகொள்கிறோம். அதில் பெண்களுக்கு உதட்டுச்சாயம் முக்கியமான ஒப்பனை பொருளாக உள்ளன. லிப்ஸ்டிக் போடுவதை ஒரு நாள் கூட தவிர்க்க முடியாத நிலை கூட பலருக்கு உள்ளது. கைப்பையில் விதவிதமான வண்ண உதட்டுச்சாயங்களுடன் தான் தற்போது பெண்கள் உலா வருகின்றனர். ஆனால் உங்கள் சரும நிறத்திற்கு பொருந்தாத நிறத்தில் லிப்ஸ்டிக் அணிவது செயற்கையான தோற்றத்தையும் தரும். பெரும்பாலான பெண்கள் உதட்டுச்சாயம் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினாலும், அதனுடைய பயன்பாடு குறித்து பெரியளவில் ஈடுபாடு காட்டுவது கிடையாது. அந்த வகையில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவோரின் கவனத்துக்குரிய சில முக்கியமான செய்திகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

நல்ல பிராண்டு லிப்ஸ்டிக்

உங்கள் சரும நிறத்துடன் பொருந்தக்கூடிய லிப்ஸ்டிக்குகளை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை நல்ல பிராண்டாக பார்த்து வாங்குவது முக்கியம். லிப்ஸ்டிக் போடும் முன் உதடுகளை சுத்தமாக கழுவ வேண்டும். உலர்ந்த உதடுகளுக்கு, ஈரமான துணியால் உதடுகளை சுத்தம் செய்த பிறகு லிப்ஸ்டிக் அல்லது லிப் பாம் போடலாம்.
 

Tap to resize

லிப் பென்சில் முக்கியம். 

உதடுகளின் இயற்கையான வடிவத்தை பராமரிக்க, உதட்டுச்சாயம் பூசுவதற்கு முன், லிப் பென்சில் கொண்டு அவுட்லைன் கொடுக்கவும். அதையடுத்து லிப்ஸ்டிக் தடவலாம். இதன்மூலம் உதட்டுக்கு அழகான வடிவம் கிடைக்கும். கரடுமுரடான உதட்டுச்சாயங்கள் உதடுகளை வறண்டதாக மாற்றும். நீண்ட கால லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க கவனமாக இருங்கள்.
 

லிப்ஸ்டிக் போடுவதில் கவனம்

உதட்டுச்சாயம் பூசுவதற்கு பிரஷ் பயன்படுத்த வேண்டும். பிரஷ் மூலம் பயன்படுத்தப்படும் உதட்டுச்சாயம் நீண்ட நேரம் நீடிக்கும். அவ்வப்போது பிரெஷ்ஷை நன்றாக சுத்தம் செய்ய மறக்காதீர்கள். லிப்ஸ்டிக் போட்ட பிறகு, அது பற்களில் ஒட்டிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. கவனமாக இருந்தால் இந்தத் தவறை தவிர்த்துவிடலாம். இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை முழுவதுமாக கிளென்சர் மூலம் அகற்றுவது மிகவும் முக்கியம். அதை செய்யாமல் விட்டால் சரும பாதிப்பு ஏற்படலாம். 
 

Latest Videos

click me!