இந்திய பணக்காரர்களில் முதன்மையானவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயத்தில் மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆடைகள் லட்சங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது தலைப்பு செய்தியானது. அடுத்ததாக முகேஷ் அம்பானி மகளின் ஆடை விலை வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஷா அம்பானி (Isha Ambani) ஆனந்த் பிரமால் (Anand Piramal) என்பவரை 2018ஆம் ஆண்டு டிசம்பரில் மணந்தார். இந்த திருமணம் பல கோடி செலவில் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமண விழாவிற்காக ரூ. 700 கோடி வரையிலும் செலவு செய்ததாக கூறப்பட்டது. இதில் இஷா அம்பானி ஆடைகளுக்காக மட்டும் ரூ.90 கோடிக்கும் மேலாக செலவழிக்கப்பட்டுள்ளது. அதில் அப்படி என்ன சிறப்பு என கேட்க தோன்றுகிறதா? வாருங்கள் காணலாம்.
இஷா அம்பானி, அந்த கோடிகள் மதிப்புள்ள லெஹங்காவில் அரச குடும்பத்து பெண் போல இருந்தார். அதில் மென்மையான சிவப்பு ஜர்தோசி பார்டர்கள், முகைஷ் மற்றும் நக்ஷி வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் வடிவங்கள் இருந்தன. இஷாவின் தோளில் கண்ணை கவரும் எம்பிராய்டரி டிசைனுடன் அடர் சிவப்பு நிறத்தில் மேலாடை கொடுக்கப்பட்டிருந்தது. தலையை மூட வெள்ளை நிற துப்பட்டாவும் கொடுக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கூட மிஞ்சும் சிறப்பு, அந்த ஆடையில் உண்டு. அது அம்பானியின் மனைவி நீதா அம்பானி தொடர்புடைய சமாச்சாரம்.
90 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அந்த லெஹெங்கா, 35 ஆண்டுகளுக்கு முன்பு நிதா அம்பானிக்கு திருமணத்திற்கு எடுத்த புடவையாம். அதை வைத்து தான் இஷா அம்பானி ஆடையை வடிவமைத்துள்ளார்கள். இந்த கல்யாணத்திற்கு மட்டும் ரூ.700 கோடி செலவாகியுள்ளது. இஷா அம்பானியின் திருமணத்தில் அணிந்திருந்த விலையுர்ந்த நெக்லஸை தான் தன் மகன் ஆனந்த் அம்பானி நிச்சயத்திலும் நீதா அம்பானி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.