திருமணத்தில் விலையுர்ந்த புடவை அணிந்த ஒரே ஹீரோயின் யார் தெரியுமா? அந்த புடவை விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

First Published | Feb 7, 2023, 10:48 AM IST

சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி திருமணம் இன்று (பிப்.7) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரத்யேகமாக தயாரான ஏழு சுற்றுகள் கொண்ட சிவப்பு நிற லெஹெங்காவை கியாரா அணிவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நேரத்தில் மற்ற பாலிவுட் நடிகைகளின் திருமண லெஹெங்காக்களின் விலையை இங்கு அறிந்து கொள்ளலாம்.  

டிசம்பர் 2021ஆம் ஆண்டில் விக்கி கௌஷல கத்ரீனா கைஃப் மணந்தார். தனது திருமணத்தில் கத்ரீனா ரூ.17 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவை அணிந்து பார்வையாளர்களை அசரடித்தார். அதன் வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி. 

In an interview, Deepika Padukone shared why did she choose not to live with Ranveer Singh in a live-in relationship.

தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை நவம்பர் 2018ஆம் ஆண்டில் கரம்பிடித்தார். அப்போது சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த லெஹங்காவை தீபிகா அணிந்து அட்டகாசமாக காட்சியளித்தார். இதன் விலை சுமார் 13 லட்சம் ரூபாய் ஆகும். 

Tap to resize

டிசம்பர் 2017ஆம் ஆண்டு அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து மணந்து கொண்டார். சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த பிரத்யேக ஆடையை அணிந்திருந்த அனுஷ்கா சர்மா, தன் அழகில் திகைக்க வைத்தார். இதன் விலை 30 லட்சம் ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏப்ரல் 2007ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திருமணம் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராய்க்கு, டிசைனர் நீதா லுல்லா அட்டகாசமான புடவையை வடிவமைத்திருந்தார். அதன் விலை வெறும் ரூ.75 லட்சம் தான். திருமணத்தில் மிக விலை உயர்ந்த புடவை அணிந்த ஒரே ஹீரோயினாக ஐஸ்வர்யா அறியப்படுகிறார். 

2018ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பரவலாக பேசப்பட்டது. அப்போது அவர் ஏழு சுற்றுகள் கொண்ட சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். இந்த லெஹங்காவை வடிவமைத்தவர் சப்யசாச்சி முகர்ஜி, இதன் விலை ரூ.13 லட்சம் என தகவல்கள் கூறுகின்றன. 

மே 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர், சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார். இதன் விலை 7 லட்சம் ரூபாய் என செய்திகள் கூறுகின்றன. அவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிபாஷா பாசு ஏப்ரல் 2016ஆம் ஆண்டில் கரண் சிங் குரோவரை மணந்தார். திருமணத்திற்காக, அவர் சப்யசாச்சி வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார். இந்த லெஹங்காவின் விலை 4 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. 

நவம்பர் 2009ஆம் ஆண்டில் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி திருமணம் செய்து கொண்டார். சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் நடந்த திருமணத்தில், மற்ற நடிகைகளைப் போல ஷில்பா லெஹங்கா அணியவில்லை. மாறாக சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். இந்த சேலையை வடிவமைப்பாளர் தருண் தஹ்லியானி பிரத்யேகமாக வடிவமைத்திருந்தார். 

Latest Videos

click me!