அம்பானி மருமகள் என்றால் சும்மாவா? அவங்க பேக் விலையே ரூ.35 லட்சம், ஆடைகளின் விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க!

First Published | Feb 2, 2023, 7:49 PM IST


அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா விழாக்களுக்கு அணிந்து செல்லும் ஆடைகளின் விலை தெரிந்தால் ஆடி போய்விடுவீர்கள். 
 

அண்மையில் இந்திய பணக்காரர்களில் முதன்மை இடத்தை தக்க வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயத்தில் மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆடைகள் லட்சங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா, பிரபல இந்தி இயக்குநர் கரன் ஜோகர் வீட்டு விழாவிற்கு சென்ற போது அணிந்த ஆடைகளின் விலை விவரம் வெளியாகி, அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

பிப்ரவரி 1ஆம் தேதி கரன் ஜோகரின் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தன் குழந்தை ப்ரித்வி உடன் ஸ்லோகா மேத்தா கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த நீல வண்ண ஆடை ரம்மியமான அழகை கொண்டிருந்தது. பல வண்ண பூக்களுடன் டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த ஆடையின் விலை ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 356 ரூபாயாம். இது தன் மகன் பிறந்த நாள் விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை விலையை விட அதிகம். 

Tap to resize

தன்னுடைய மகன் ப்ரித்வியின் இரண்டாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஸ்லோகா மேத்தா, இளம்சிவப்பு நிற ஆடையும், டெனிம் கோர்டும் அணிந்திருந்தார். அப்போது அவர் தன் கையில் வைத்திருந்த கைப்பை விலையை கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்குள்ளாவீர்கள். அவர் கையில் இருந்த அடக்கமான ஹெர்ம்ஸ் மினி கெல்லி செல்லியர் ஜான் போர்ஜன் பேக் 34 லட்சத்து 59 ஆயிரம் என்கிறது ஒரு தகவல். அமெரிக்க டாலர்களில் சொல்ல வேண்டுமெனில் usd 41,775 மட்டுமே.. அது சரி அம்பானியின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா..!

குட்டி பையன் ப்ரித்வியின் முதல் பிறந்தநாளில் ஸ்லோகா மேத்தா எளிமையான ஆடையை தான் உடுத்தியிருந்தார். ஆனால் அந்த ஆடையின் விலை நம்மை ஒரு கணம் திகைக்க வைக்கும். கிட்டத்தட்ட அதன் மதிப்பு 1 லட்சத்து 21 ஆயிரம். இந்த தகவலை அம்பானியின் ரசிகர்களின் பக்கம் ஒன்று வெளியிட்டிருந்தது. கரன் ஜோகர் வீட்டு விசேஷத்தில் அவர் அணிந்திருந்த ஆடையை விட இந்த விலை குறைவுதான். 

கடந்த 2019ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ப்ரித்வி என்ற மகன் இருக்கிறார். அவரோடுதான் ஸ்லோகா மேத்தா அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்கிறார். ஸ்லோக மேத்தா வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!