Published : Jan 23, 2023, 05:05 PM ISTUpdated : Jan 23, 2023, 05:12 PM IST
முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் குடும்பம் மற்றும் தாய் ஷைலா மெர்ச்சன்ட் குறித்த சுவாரசிய தகவல்கள்... Ambani's youngest niece Radhika Merchant mother style and interesting facts
இந்தியாவின் பணக்காரர்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, நீதா அம்ஃபானி தம்பதிகளின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு அச்சாணியாக அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதுவே சமீபமாக தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது.
25
image: instagram/rahulmishra_7
அம்பானியின் இளைய மருமகளாக வரவிருக்கும் ராதிகாவின் குடும்பம் குறித்த தகவல்கள் கொஞ்சம் சுவாரசியமூட்டுபவை. என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட், ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் தான் ராதிகா மெச்சன்ட்.
35
image: instagram/rahulmishra_7
ஷைலா மெர்ச்சன்ட் 90களில் வீரேன் மெர்ச்சண்டை மணந்தார். இத்தம்பதிக்கு ராதிகா, அஞ்சலி ஆகிய இருமகள்கள். இருவரும் சான்றோர் வியந்து பாராட்டும் வணிகப் பெண்களாக உருவெடுத்தனர். வீரேன் மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் போது, ஷைலா மெர்ச்சன்ட் வீரேனை திருமணம் செய்தார். அதன் பிறகே அவர் மருந்து நிறுவனத்தின் மேலாளர் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஷைலா மெர்ச்சன்ட் குஜராத்தைச் சேர்ந்தவர். மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
45
தனது அட்டகாசமான கோல்டன் கலர் லெஹங்காவில் ராதிகா மெர்ச்சன்ட் விருந்தாளிகளை கிரங்கடித்த அதே நேரம், நிச்சயதார்த்த விருந்தில் அவரது தாயார் ஷைலா மெர்ச்சன்ட்டும் தனது மகளுக்கு அருகில் ஜொலித்து கொண்டிருந்தார். ஷைலா மெர்ச்சன்ட்டின் ஸ்டைலும், லுக்கும் காண்போரை வாயடைக்கச் செய்தது.
மெஹந்தி விழாவில் ராதிகா மெர்ச்சன்ட், இளஞ்சிவப்பு நிற லெஹங்கா, அணிகலன்களை அணிந்திருந்தபோது, அவரது தாயார் ஷைலா மெர்ச்சன்ட் தனது மகளுக்கு போட்டியாக பிரமிக்க வைக்கும் நகைகளுடன், அட்டகாசமான ஊதா நிற ஆடையை அணிந்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினார். ராதிகா மெர்ச்சண்டின் நிச்சயதார்த்த ஆடை கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய். முந்தைய நாள் மெகந்தி விழாவில் ராதிகா அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற ஆடை 4 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.