நீங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க விரும்பினால் பேரிச்சம்பழம் உங்களுக்கு சிறந்த தேர்வாகும். எனவே, கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள், உணவில் பேரீச்சம்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பின் அளவைக் குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
பேரிச்சம்பழத்தின் பயன்கள்:
பேரிச்சம்பழத்தில் கனிமங்கள், சர்க்கரை, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நாள் முழுவதும் உடலில் ஆற்றல் சுழற்சியை ஊக்குவிக்கின்றன.
பேரிச்சம்பழம் கெட்ட கொழுப்பைக் குறைக்குமா?
கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் குணப்படுத்த பேரிச்சம்பழம் உதவும். இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, கொழுப்புகள் இதயத்தில் சேராமல் தடுக்கவும், இரத்தக் கட்டிகளை உண்டாக்கும் சிக்கலில் இருந்து தீர்வு காணவும் பேரிச்சம்பழம் உதவுகிறது.
மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!
தினசரி உணவில் பேரீச்சம்பழங்களை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும்.பேரிச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது என்பதால், பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்கவும் பேரிச்சம்பழம் உதவும்.