Facial Mask : பல்துலக்கும் பற்பசை சருமத்தை பொலிவுறச் செய்யுமா- அது எப்படி..?

First Published | Sep 9, 2022, 6:26 PM IST

காலையில் எழுந்ததும் பலரும் கண்விழிப்பது பற்பசையில் தான். அதை வைத்து பல்துலக்கி விட்டு தான், நம்மில் பலரும் மறுகாரியம் பார்ப்போம். இப்படி நம்முடைய வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் பற்பசையின் மூலம் பல் துலக்குவதை விடவும் பல நன்மைகள் கிடைக்கின்றன. முகக் கண்ணாடியிலுள்ள அழுக்குகளை பற்பசை கொண்டு துடைத்தால் பளபளப்பு பெறும். மேலும் கழிவறைக் குழாய்கள் மற்றும் பிடிமானங்களை பற்பசை மூலம் சுத்தம் செய்தால் பளீச் என்று மாறும். இந்நிலையில், சரும பிரச்னைகளுக்கு பற்பசை நிரந்தர தீர்வு அளிக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ள இந்த செய்தி தொடர்பாக விரிவான விளக்கங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
 

உடனடிப் பொலிவு

பல்வேறு பன்நாட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி செலவழித்து தங்களுடைய ஃபேஷியல் க்ரீம்களை சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பற்பசையின் முக்கிய குணநலன் தெரியவந்துள்ளது. அதாவது பற்களை பளீச் என்று மாற்றக் கூடிய ‘வைட்டினிங் ஏஜெண்ட்’ தன்மை கொண்ட பற்பசைகள் மூலம், சருமத்துக்கு உடனடி பொலிவு கிடைக்குமாம். ஒரு துளி பற்பசையுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, அதில் பன்னீரை ஊற்றி கலக்கி வைத்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவிட வேண்டும். அதை தொடர்ந்து மாயிஸ்துரைஸர் க்ரீம் மற்றும் சன்ஸ்கீர்ன் தடவிக் கொள்ளலாம். இதன்மூலம் சருமத்துக்கு உடனடி பலன் கிடைக்கும். முகம் பொலிவுறும். 
 

முகப்பருவை நீக்கும்

சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் போது, முகத்தில் அங்காங்கு பரு உருவாகும். இதை உடனடியாக நீக்குவதற்கு பற்பசை உதவுகிறது. ஆட்காட்டி விரலில், ஒரு வேர்கடலை அளவுக்கு பற்பசையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பரு இருக்கும் இடங்களில் வைத்து நன்கு தடவ வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன்பு இப்படிச் செய்துவிட்டு, காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிட வேண்டும். அப்போது பருவின் அளவு குறைந்து காணப்படும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால், பரு நீங்கும். தழும்பும் தெரியாது. பற்பசையில் பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரோஜன் பேரோக்சைடு உள்ளது. இதன்காரணமாக பரு நீக்கும் வழிமுறைக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது.

Tap to resize

கரும்புள்ளி ஓடிப்போகும்

பல்வேறு பல் மருத்துவர்கள் அவ்வப்போது பற்பசையை மாற்றி பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் கூறப்படுகின்றன. சில சொரசொரப்பான தன்மை கொண்ட பற்பசை உங்களிடம் இருந்தால், அதை வைத்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கலாம். சிறிதளவு பற்பசையுடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் நன்கு தேய்க்கவேண்டும். இதன்மூலம் உடனடியாக கரும்புள்ளிகள் நீங்கிவிடும். ஒருவேளை முகத்தில் தொடர்ந்து கரும்புள்ளிகள் உருவாகி வந்தால், உடனடியாக சரும நிபுணரை அணுகவும்.

இந்த வழிமுறைகளை செய்து பார்ப்பதற்கு முன்னதாக, தங்களுடைய சருமத்தின் நிலைப்பாட்டை குறித்து தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்களுக்கு உணர்திறன் அதிகம் கொண்ட சருமம் என்றால், சோதனை செய்துவிட்டு பார்த்துவிட்டு வழிமுறைகளை பின்பற்றலாம். ஒருவேளை உங்களுக்கு மிகவும் வறண்டுபோன சருமம் என்றால், மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். பற்பசை கொண்டு நீங்கள் செய்யும் முயற்சியின் போது, தங்களுடைய சருமத்தில் அரிப்பு அல்லது சிராய்ப்புகள் போல தோன்றினால், இந்த வழிமுறை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். 

Latest Videos

click me!