ஏழுமலையான் பக்தர்களை சீண்டிய நித்தி... வெங்கடேசப் பெருமாள் வேடத்தில் சர்ச்சையை கிளப்பிய பதிவு...!

First Published | Apr 9, 2021, 6:34 PM IST

சிவன், கால பைரவன் என கெட்டப் போட்டு வந்த நித்தியானந்தா தற்போது ஏழுமலையானாக அவதாரம் எடுத்துள்ளார்

பிரபலங்களை எல்லாம் பின்னுத்தள்ளும் வகையில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவ நித்தியானந்தா. பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா கெட்டப்பு போடுவதிலும் வல்லவர்.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதை தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Tap to resize

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தது பரபரப்பைக் கிளப்பியது. கைலாசாவில் வசிப்பவர்களுக்கு விசா கொடுப்பதாக நித்தியானந்தா அறிவிக்க லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்தது.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று, தனது நாட்டுக்கான நாணயங்களை வெளியிடுவதாக கூறி பண்டைய கால முறைப்படி நாணயங்களை வெளியிட்டு அலப்பறை கொடுத்தார்.
சிவன், கால பைரவன் என கெட்டப் போட்டு வந்த நித்தியானந்தா தற்போது ஏழுமலையானாக அவதாரம் எடுத்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக நித்தியானந்தா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தன்னுடை முகநூல் பக்கத்தில் பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவாருங்கள், செல்வம் ஏராளமாக பெருகும் என்று நித்தியானந்தா பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Latest Videos

click me!