பட்ஜெட் ஷாப்பிங் ஸ்டைலிஷ் லுக்.. தெரிஞ்சுக்க வேண்டிய டெனிம் டிரெஸ் காம்பினேஷன்!

First Published | Dec 28, 2022, 4:54 PM IST

அடுக்கடுக்காக ஆடைகளை வாங்கி குவிப்பதை விட சிறந்த ஆடைகளை மட்டுமே தேர்வு செய்து வாங்கினால் பணமும் மிச்சம், நேரமும் மிச்சம். அதற்கென சில ஐடியாக்களை தெரிந்து கொள்ளுங்கள். 

ஆடைகளை தேர்வு செய்யும் போது எந்த சீசனுக்கு அவற்றை உடுத்தி கொள்ளப்போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நெருங்கிய நண்பர்களுடன் சாதாரண சந்திப்பிற்கு செல்லும் போது அணிந்திருக்கும் உடைகளும் கூட அதில் முக்கியமானது தான். ஒவ்வொரு முறையும் என்ன அணிய வேண்டும் என்பதை உடனடியாக முடிவு செய்வதில் பெண்களுக்கு கொஞ்சம் குழப்பம் எப்போதுமே இருக்கிறது. அலமாரிகளில் எவ்வளவோ ஆடை இந்தாலும் மீண்டும் புதியதாகவே வாங்க விரும்புகிறார்கள். அவர்களுக்கான எளிமையான டிப்ஸ் இதோ! 

hera's closet twitter

டெனிம் வித் ஒயிட் டாப்

டெனிம் ரக உடைகள் எப்போதுமே பீக்கில் தான் இருக்கும். அலுவலக வேலைகளில் டெனிமுடன் ஒயிட் டாப் அணிவது வேலையை இன்னும் சுறுசுறுப்பாக்கும். வெள்ளை நிறங்களில் ஷோல்டர் டாப்ஸ், ஷர்ட்ஸ், டி- சர்ட், பூ வேலைபாடுகளுடன் கூடிய எம்ப்ராய்டரி டாப் உள்ளிட்ட எந்த ஆடைகளுடன் டெனிம் ஜீன்ஸ் அணிந்தாலும் பொருத்தமாகவே இருக்கும். ஒருவேளை நீங்கள் உடுத்திக் கொள்ள வெள்ளை நிறம் இல்லாதபட்சத்தில், ஏதேனும் வெளிர் நிறத்தைப் பயன்படுத்தி வெள்ளை துப்பட்டாவை போட்டு கொள்ளுங்கள். 

Tap to resize

டெனிம் வித் ஸ்லீவ்லெஸ் டாப் 

நீங்கள் எந்த ஆடையை ஷாப்பிங் செய்தாலும் அதனுடன் தளர்வான ஆடைகளை அணிவதுதான் அடுத்த ட்ரெண்ட். தளர்வான டெனிம் ஜீன்ஸை ஸ்லீவ்லெஸ் டாப் காம்பினேஷனில் அணிந்து பாருங்கள். இது உங்களைத் தனித்துவமாகக் காட்டும். இதை வார இறுதி நாட்களில் முயன்று பார்க்கலாம். 

பேக்கி சோல்டர் டாப்ஸ் 

பொருத்தமான சோல்டர் டாப்ஸுடன் டெனிம் அணிந்து கொண்டால் நீங்கள் அட்டகாசமான தோற்றத்தில் தெரிவீர்கள். 'வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண்ணடிக்கும்' என்ற சினிமா பாடல் நிஜமாகும். குளிர்காலத்தில் இந்த உடைகளை அணியும் போது ஸ்கார்ப் கட்டிக் கொள்ளலாம். 

டெனிம் வித் எத்னிக் குர்தா

குர்தா அணிவது கோடைகாலங்களில் நல்ல தேர்வு. மென்மையாக இருப்பதால் அனைத்து காலத்திற்கும் ஏற்ற உடையாகவும் இதை குறிப்பிடலாம். டெனிம்களுடன் அணிய நல்ல சாய்ஸ். அலுவலகம் சாராத அல்லது அது தொடர்புடைய எந்த சந்திப்பாக இருந்தாலும் இது பொருத்தமாகவே இருக்கும். இதனுடன் பொருத்தமான காதணிகளை அணிந்து கொண்டு நல்ல மேக்கப் போட்டால் 90களின் அழகிய தோற்றம் எளிதில் கிடைக்கும். 

Image Credit: Anushka Sharma Instagram

ஷார்ட்ஸ் 

கேஷுவலான லுக்கில் வலம் வர டெனிம் ஷார்ஸுடன் தளர்வாக தோற்றமளிக்கும் டீ சர்ட்டை அணிந்து கொள்ளலாம். இந்த மாதிரியான உடைகளுக்கு ஸ்னீக்கர்கள் அணிவது பொருத்தமாக இருக்கும். 

Latest Videos

click me!