அம்பானி வீட்டு மூத்த மருமகளா இவங்க? ஆடம்பரத்திற்கு அளவேயில்லை.. பல கோடிக்கு நெக்லஸ்? இன்னும் இருக்கு!

First Published | Apr 29, 2023, 7:07 PM IST

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவின் வைர- மரகத கற்கள் பதித்த நெக்லஸின் விலையை கேட்டால் அசந்துவிடுவீர்கள். 
 

ஷ்லோகா மேத்தா

அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தா . இவரது திருமணத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸ் இப்போது ஹாட் டாபிக்-ஆக மாறியுள்ளது. ஆகாஷ் அம்பானி திருமணம் பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தில், பயன்படுத்தப்பட்ட ஆடைகளும் விலையில் உயர்ந்தவை தான். 

ஆடைகளே ஆடம்பரம்  

தனது திருமணத்தன்று ஸ்லோகா மேத்தா , பிரபல டிசைனர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த சிவப்பு, தங்க நிற லெஹங்கா அணிந்திருந்தார். அவரது வைர நெக்லஸ் கண்ணை பறித்தது. இந்த வைர நெக்லஸ் 'ராணிஹார்', பெரிய வைரங்கள், மரகதங்களைக் கொண்டது. இந்த நெக்லஸின் விலை 3 கோடி ரூபாய்க்கு மேல் என்கின்றன தகவல்கள். 

Tap to resize

இந்த திருமணத்தில் அவர் அணிந்திருந்த நெக்லஸ் அவருக்கு யார் கொடுத்தது தெரியுமா? கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நெக்லஸை அவரது மாமியார் நீதா அம்பானிதான் பரிசாக வழங்கியுள்ளார். ஸ்லோகா மேத்தாவிற்கு சொந்தமான நெக்லஸின் பின்னால் இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள் உள்ளன. 

நெக்லஸ் வடிவமைப்பு 

ஸ்லோகா மேத்தா சொந்தமாக வைத்திருக்கும் நெக்லஸ் L’Incomparable எனும் பெயர் கொண்டது. இதனை லெபனான் நகைக்கடை வியாபாரி மௌவாத் தான் வடிவமைத்தார். இந்த நெக்லஸின் உள்புறம் மஞ்சள் வைரங்களைக் கொண்டுள்ளது. இந்த நகையின் மொத்த விலை சுமார் 500 கோடி ரூபாய் இருக்கலாம் என்கின்றன தகவல்கள். 

இதையும் படிங்க: இவரோட வீட்டுக்கு முன்னாடி அம்பானி வீடு கூட சுமார் தான்! உலகின் விலையுர்ந்த வீடுகள்.. உள்ளே எப்படி இருக்கும்?

ஸ்லோகா மேத்தா அம்பானியின் மருமகள் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் இவர், இந்தியாவில் உள்ள ரோஸி புளூ என்ற வைர நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள். ஸ்லோகாவும், ஆகாஷ் அம்பானியும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமண செலவு 

ஆகாஷ் அம்பானி தன் திருமண நாளில் அணிந்திருந்த உடைகள், அவரது மனைவியின் ஆடம்பரமான நெக்லஸ் உட்பட அனைத்து அணிகலன்களும் 10 கோடி ரூபாய்க்கு மேல் விலை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஷ்லோகா மேத்தாவின் திருமண லெஹெங்காவுக்கு மட்டும் ரூ.5 கோடி செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அடேங்கப்பா! இத்தனை லட்சத்துக்கு புடவையா? நீதா அம்பானி உடுத்திய உலகின் விலையுயர்ந்த புடவை.! அப்படி என்ன சிறப்பு

Latest Videos

click me!