பெண்களே!! 35 வயசு தாண்டிட்டா? அப்ப கண்டிப்பா இந்த 4 உணவுகளை அதிகம் சாப்பிடுங்க

Published : Jul 22, 2025, 12:45 PM IST

35 வயதிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் தசை இழப்பை தடுக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இங்கே.

PREV
16
Muscle Loss in Women After 35

பொதுவாகவே முப்பத்தி ஐந்து வயதிற்கு பிறகு பெண்களின் உடலில் வளர்சிதை மாற்றம் குறைய ஆரம்பிக்கும். ஆனால் போதிய ஊட்டச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் உடலை வலுவாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க முடியும். நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தாலோ, கடினமான உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ கண்டிபாக உங்களது உணவில் கண்டிப்பாக புரதம் சேர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இதுதான் தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், மீட்சியை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவுகிறது.

26
புரதம் ஏன் அவசியம்?

35 வயதிற்கு பிறகு தசைகளை வலுப்படுத்த ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடலானது கொழுப்பை பெற மெலிந்த திசுக்களை உறிஞ்சத் தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில், புரதம் உங்களுக்கு ஒரு உதவும். ஆம், புரதமானது பசியை கட்டுப்படுத்தும், எலும்புகளை வலுப்படுத்தும், ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களுடன் இணைந்து உடலை சீராக இயங்க வைக்கும்.

36
பருப்பு வகைகள் ;

நீங்கள் அசைவம் சாப்பிடும் நபர் என்றால் கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை உங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் வேக வைத்த பருப்பில் சுமார் 18 கிராம் புரதம், நார்ச்சத்து, இரும்பு சத்து மற்றும் ஃபோலேட் உள்ளன. இவை 35 வயதை தாண்டிய பெண்களுக்கு மிக மிக அவசியம். எனவே இவற்றை நீங்கள் சாலட், குழம்பு போன்ற உங்களுக்கு விரும்பிய வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக்கும், ரத்த சர்க்கரை நிலையாக வைக்கும், தசை வளர்ச்சி மற்றும் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

46
முட்டை :

முட்டையில் புரதம் நிறைந்துள்ளன. முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் மற்றும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் பி12 மற்றும் டி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்தை முழுமையாக பெற வேகவற்ற முட்டை சாப்பிடுவது சிறந்தது.

56
கிரேக்க தயிர் ;

அனைத்து தயிரை போல அல்லாமல் கிரேக்க தயிர் தனித்தது. இதில் இருக்கும் புரதம் வழக்கமான தயிரை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன அதாவது ஒரு கப் கிரேக்க தயிரில் சுமார் 20 கிராம் புரதம் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. இதனுடன் ஆளி விதைகள், பழங்கள் சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம்.

66
கோழியின் மார்பு

கோழியின் மார்பில் புரதம் நிறைந்துள்ளன. அதாவது 100 கிராம் எடையுள்ள கோழியின் மார்பில் சுமார் 30 கிராம் புரதம் உள்ளன. இவை தசைகளை வளர்க்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories