தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சூடான நீர் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் வாயு, அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இது தவிர உடல் எடையை குறைக்கவும் வெந்நீர் உதவுகிறது. ஆனால் சிலர் சூடான நீர் குடிக்கவே கூடாது. அப்படி குடிப்பது அவர்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அப்படி யாரெல்லாம் வெந்நீர் குடிக்க கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
25
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் :
உங்களுக்கு ஏற்கனவே செரிமான பிரச்சனை இருந்தால் நீங்கள் வெந்நீர் குடிப்பது நல்லதல்ல. அப்படி குடித்தால் செரிமான பிரச்சனைகளை இன்னும் மோசமாக்கிவிடும். ஒருவேளை நீங்கள் வெந்நீர் குடிக்க விரும்பினால் மிதமான சுற்றில் குறைந்த அளவில் குடிக்கவும்.
35
உணர்திறன் வாய்ந்த பற்கள் :
உங்களது பற்கள் ரொம்பவே உணர்திறன் மிக்கதாக இருந்தால் சூடான நீர் குடிக்க கூடாது. அதுபோல சூடான நீர் குடிக்கும் போது பல் கூச்சம் ஏற்பட்டால் உடனே அதை குடிப்பதை நிறுத்தி விடுங்கள். இல்லையெனில் பற்கள் மோசமாக சேதமடையும்.
உங்களது உடலில் அடிக்கடி நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் சூடான நீர் குடிப்பது உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அதாவது சில சமயங்களில் நீர்ச்சத்து குறைப்பாடு பிரச்சனையை இன்னும் அதிகரிக்கச் செய்துவிடும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் சூடான நீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
55
தூக்கமின்மை :
இது கேட்பது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அதான் உண்மை. அதாவது நீங்கள் சூடான நீரை அதிக சூட்டிலோ அல்லது அதிகமாக குடித்தால் இரவில் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். அதுவும் இரவு தூங்கும் முன் வெந்நீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். எனவே, நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் தூங்கும் முன் சூடான நீர் குடிப்பதை தவிர்க்கவும்.