பிறரை தொடும்போது கையில் 'ஷாக்' அடிக்கும் உணர்வு!! இந்த காரணம் தெரியுமா?

Published : May 29, 2025, 03:11 PM IST

சில நேரங்களில் மற்றவரை தொடும்போது கையில் ஷாக் அடிப்பது போல சுர் என்று உணர்வு ஏற்படுவது ஏன் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

PREV
15
Who Do We Feel Electric Shock While Touching Someone

நாம் சில சமயங்களில் யாரையேனும் தொடும்போது கையில் கரெண்ட் பாய்வது போல் சுர் என்று ஒரு உணர்வு ஏற்படும். வலிக்காது. ஆனால் உடனடியாக கையை அந்த நபரிடமிருந்து எடுக்கும்போது சங்கடமாக இருக்கும். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு தான் ஏற்படும். இதற்கு என்ன காரணம் என சிந்தித்துள்ளீர்களா? மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை. உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இப்படி ஏற்படலாம். வேறு என்னென்ன காரணங்கள் என இங்கு காணலாம்.

25
வைட்டமின் குறைபாடுகள்:

சிலருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும். அவர்களுக்கு பிறரை தொடும்போது இந்த ஷாக் அடிக்கும் உணர்வு ஏற்படலாம். வைட்டமின் பி12 இரத்த அணுக்கள் உற்பதிக்கு மட்டுமின்றி, நரம்பு மண்டலத்திற்கும் உதவுகிறது. இதன் குறைபாடு நரம்பு மண்டல இயக்கத்தில் இடையூறை ஏற்படுத்தலாம்.

35
வைட்டமின் பி12 முக்கியத்துவம்:

வைட்டமின் பி12 தான் புதிய இரத்த சிவப்பணுக்களை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. டிஎன்ஏ உற்பத்திக்கும், மூளையின் செயல்பாட்டிற்கும் வைட்டமின் பி12 உதவும். வைட்டமின் பி12 குறைபாடு வந்தால் நரம்பு செல்களை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படும். வைட்டமின் பி12 குறைபாடு நீங்க இறைச்சி, முட்டை, பால் பொருட்கள் ஆகியவை உண்ணலாம்.

45
பிற காரணங்கள்:

நரம்பு பாதிப்பு:

இந்த மாதிரி மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு நரம்புகளில் இருக்கும் பிரச்சனையைக் குறிக்கும். பொதுவாக நரம்புகள் தான் மூளைக்கும், உடலுக்கும் இடையே சிக்னல் கொடுக்கக் கூடியவை. இவை சேதமடைந்தால் அல்லது எரிச்சலடைந்தால் மின்சார அதிர்ச்சி சிக்னல்களை அனுப்பலாம். சியாட்டிகா அல்லது நரம்புகள் கிள்ளுதல் போன்றவையும் காரணமாக அமையலாம்.

55
காயங்கள்:

உடலில் உள்ள காயங்கள் காரணமாக அமையலாம். முதுகெலும்பு அல்லது நரம்புகளில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். காயங்கள் தவிர நீரிழிவு நோய், ஏதேனும் தொற்றுகள், சில மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் ஷாக் அடிக்கும் உணர்வு ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories