உடம்புல இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்போ மெக்னீசியம் கம்மியா இருக்குனு அர்த்தம்

Published : May 29, 2025, 01:01 PM IST

மெக்னீசியம் உடலுக்கு பல நன்மைகளை செய்யக்கூடிய முக்கியமான சத்து. இதன் குறைபாடு உடலில் எந்த மாதிரியான அறிகுறிகளை உண்டு பண்ணும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16

Symptoms of Magnesium Deficiency in the Body : நம்முடைய உடல் செயல்பாடுகள் நன்றாக நடைபெற வேண்டுமானால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட சத்துக்களில் ஒன்றுதான் மெக்னீசியம். இந்தச் சத்தானது நரம்புகள், எலும்புகள், ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் தசைகள் போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த மெக்னீசியம் சத்தானது உடலில் போதுமான அளவு இல்லையென்றால், சர்க்கரை நோய் பக்கவாதம் மாரடைப்பு போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கும். எனவே உடலில் போதுமான அளவு மெக்னீசியம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

26

இத்தகைய சூழ்நிலையில், உடலில் போதுமான அளவு மெக்னீசியம் இல்லையென்றால், உடலில் ஒருசில அறிகுறிகளை காட்டும். ஆரம்பத்திலேயே அந்த அறிகுறிகளை கண்டு அதற்குரிய சிகிச்சையை மருத்துவரிடம் எடுத்துக் கொண்டால் நிலைமை மோசமடைவதை தடுக்கலாம். இப்போது உடலில் மெக்னீசியம் குறைவாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

36

தசை வலி மற்றும் பிடிப்பு:

தசைகளின் செயல்பாடு மற்றும் அதன் ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் ரொம்பவே முக்கியம். உடலில் போதுமான அளவில் இது இல்லையென்றால் அதன் விளைவாக கடுமையான தசை வலி, பிடிப்பு ஏற்படக்கூடும். எனவே உங்களுக்கு திடீரென தசை பிடிப்பு, வலி, கால் குடைச்சல் போன்ற பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால், உங்களது உடலில் மெக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

46

அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் பலவீனம்:

உடலில் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட மெக்னீசியம் உதவும். எனவே உடலில் இது குறைவாக இருந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகும். இதன் விளைவாக அதிகப்படியான சோர்வு பலவீனம் ஏற்படும். நீங்கள் அடிக்கடி மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனமாக உணர்கிறீர்கள் என்றால், உங்களது உடலில் மெக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

56

ஒழுங்கற்ற இதய துடிப்பு:

இதயத்துடிப்பு நன்றாக இருக்க வேண்டுமானால் உடலில் போதிய அளவு மெக்னீசியம் இருக்க வேண்டும். மெக்னீசியம் உடலில் குறைவாக இருந்தால் சீரற்ற இதயத்துடிப்புக்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு திடீரென படபடப்பு அல்லது இதயத் துடிப்பு சீராக இல்லாமல் உணர்ந்தால் உடனே மருத்துவர் அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

66

மெக்னீசியம் உணவுகள்:

உடலில் மெக்னீசியம் குறைவாக உள்ளவர்கள் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை தங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்த குறைபாட்டை சரி செய்து விடலாம். சில மெக்னீசியம் நிறைந்த உணவுகளின் பட்டியல் இங்கே:

  • பூசணி மற்றும் சியா விதைகள் 
  • முந்திரி மற்றும் பாதாம் 
  • சோயா பால் மற்றும் டோஃபு 
  • வேர்க்கடலை வெண்ணெய் 
  • கருப்பு காராமணி 
  • பசலைக் கீரை 
  • சால்மன் மீன்

இந்த உணவுகளை தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் மெக்னீசிய குறைபாட்டை சுலபமாக போக்கிவிடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories