சாப்பிட்டதும் 2 நிமிடங்கள் கட்டாயம் வாக்கிங் போகனும்!! ஏன் தெரியுமா?

Published : May 29, 2025, 09:08 AM IST

சாப்பிட்ட பின்னர் 2 நிமிடங்கள் கட்டாயம் நடக்க வேண்டும். இதனால் உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நடக்கின்றன.

PREV
14

Why Should You Walk for 2 Minutes After a Meal : சாப்பிட்ட பின்னர் ரிலாக்ஸாக அமர்ந்திருப்பது, சாப்பிட்டுவிட்டு தூங்குவது போன்றவை பலருக்கும் இயல்பான விஷயங்கள். ஆனால் இந்த இரண்டு விஷயங்களையும் செய்வதால் உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிலும் நீங்கள் அதிகளவு கார்போஹைட்ரேட் காணப்படும் அரிசி அல்லது மாவுச்சத்து உணவுகள் சாப்பிட்டிருந்தால் சர்க்கரை அளவு உச்சத்திற்கு சென்றுவிடும்.

24

சாப்பிட்ட பின் எதுவும் செய்யாமல் அமர்ந்திருப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வெகுநேரமாகிவிடும். இப்படி தொடர்ந்து நடக்கும்போது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. தினமும் பயன்படுத்தப்படாமல் கொழுப்பாக சேமிக்கப்பட்டுள்ள கூடுதல் கலோரிகள் வயிற்றைச் சுற்றி கொழுப்பாக மாறிவிடுகிறது. இதை தடுக்க சாப்பிட்ட பின் வெறும் 2 நிமிடங்கள் மித வேகத்தில் நடப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன.

34

சாப்பிட்ட பின் 2 நிமிட வாக்கிங்:

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியான ஓர் ஆய்வில் சாப்பிட்டதும் நடப்பது குறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பல சோதனைகளை பகுப்பாய்வு செய்த பின்னர் ஒரு விஷயத்தை கண்டறிந்தனர். சாப்பிட்ட பின் 2 முதல் 5 நிமிடங்கள் வரையிலும் ஒரு குறுநடை போடுவது அமர்ந்திருப்பவர்களை விட இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைக்க உதவியது தெரிய வந்தது.

44

நடப்பதால் என்ன பயன்?

நடக்கும்போது கால்கள், உடலின் மைய தசைகள் சுருங்கத் தொடங்கும். இதனால் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸைப் பயன்படுத்தப்படுகிறது. சாப்பிட்டதும் உடனே மந்தநிலையைத் தவிர்க்கும். ஒருவருக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையெனில் இதய ஆரோக்கியம் பாதிக்கும். சாப்பிட்டதும் நடப்பது உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories