Alcohol and Food : மது குடிக்குறப்ப இந்த 'சைட் டிஷ்' மட்டும் எடுத்துக்காதீங்க! மதுவை விட மோசமான விளைவுகள் கொண்டு வரும்

Published : Dec 23, 2025, 03:41 PM IST

மது அருந்தும் போது சில உணவுகளை சாப்பிடுவது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15

பொதுவாக மது பிரியர்கள் மது அருந்தும் போது அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் சில உணவுகள் உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே மது அருந்தும் போது சாப்பிடக்கூடிய உணவுகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் மதுவுடன் எடுத்துக்கொள்ளும் உணவில் ரொம்பவே கவனம் தேவை. இப்படியிருக்கையில் மது அருந்தும் போது எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25

மது அருந்தும் போது எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை சாப்பிடுவதை சிலர் விரும்புவார்கள். ஆனால் அப்படி எண்ணெய் உணவுகளை மதுவுடன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர உடல் பருமன் அதிகரிக்கும்.

35

அதுபோல மது அருந்தும் போது காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. குறிப்பாக சிக்கன், மட்டனை காரமாக சாப்பிடவே கூடாதாம். ஆம்லெட் போன்றவற்றையும் மதுவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

45

மேலும் பிரெட் சம்பந்தமான உணவுகளை மது அருந்தும் போது சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சாக்லேட் போன்ற இனிப்பான உணவுகளையும், பர்கர், பீட்சா, போன்றவற்றையும் மது அருந்தும்போது எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ டி சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் வாயு வயிற்றெரிச்சல் வயிறு பூசம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

55

மது குடித்த பின் பால் பொருட்கள், ஹாட் சாஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டால் செரிமான அமைப்பு மோசமாக பாதிக்கப்படும். அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories