'இரவு நல்லாதா துங்குற ஆனா காலையில முதுகு வலிக்குது' என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்களும் தினமும் இதே பிரச்சினையை தான் அனுபவிக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. ஆமாங்க தினமும் காலையில் தூங்கி எழும்போது முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னவென்று இப்போது இங்கு காணலாம்.
25
தூங்கும் முறை :
இரவு நன்றாக தூங்கியும் காலையில் முதுகு வலி வருவதற்கு முக்கிய காரணம் சரியான நிலையில் தூங்காமல் இருப்பது தான். அதுபோல சரியான முறையில் தலையணை வைத்து தூங்காமல் இருப்பதும் காரணம் எனவே நீங்கள் தூங்கும் பொசிஷன் மற்றும் தலையணை வைத்துக் கொள்ளும் முறை சரியாக இருந்தால் காலையில் தூங்கி எழும்போது முதுகு வலி வராது.
35
எந்த பொசிஷனில் தூங்கணும்?
நீங்கள் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தால் முதுகு வலி, இடுப்பு வலி குறையும். ஆனா, நான் 'நேராக படுத்து பழகி விட்டேன், ஒரு பக்கமாக படுத்தால் தூக்கம் வராது' என்று புலம்பும் நபரா? நீங்கள் தலையணையே முழங்காலுக்கு கீழ் வைத்து தூங்குங்கள். இது உங்களுக்கு ஓரளவுக்கு நல்ல பயன் அளிக்கும்.
காலையில் தூங்கி எழுந்தவுடன் முதுகு வலியல் அவதிப்படுகிறீர்கள் என்றால் இதற்கு உங்கள் மெத்தை தான் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஆம், தரமற்ற மெத்தையை பயன்படுத்தினால் காலையில் எழுந்தவுடன் முதுகு வலி வரும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நல்ல மெத்தையை வாங்கி பயன்படுத்துங்கள். இதனால் வலி ஏற்படாது. இரவு முழுவதும் நன்றாக தூங்கலாம்.
55
நினைவில் கொள் :
- முதுகு வலி உள்ளவர்கள் குப்புறப்படுத்து தூங்குவதை தவிர்க்கவும். இந்த பொசிஷனில் தூங்கினால் வலி மேலும் அதிகரிக்கும்.
- உட்காரும் நிலையை மாற்றினால் வலியை முழுமையாக கட்டுப்படுத்தலாம். எனவே உட்காரும்போது நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். அதுபோல நடக்கும் போது குனிந்தபடி நடக்காமல் நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும்.
- முதுகு வலியை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள் ஏதேனும் செய்வதன் மூலம் வலியை குறைக்க முடியும்.