Iron Deficiencies Symptoms : உடம்புல இரும்புச்சத்து குறைஞ்சா இந்த 'அறிகுறிகள்' தெரியும் 'அலட்சியம்' பண்ணாதீங்க

Published : Dec 22, 2025, 06:29 PM IST

இரும்புச்சத்து தான் இரத்த சிவப்பணுக்களின் வழியாக ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்கின்றது. எனவே இந்த சத்து குறைபாடு ஏற்படாமல் உடலை பார்த்துக் கொள்ளுங்கள். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது உடலில் தோன்றும் சில அறிகுறிகள் குறித்து இங்கு காணலாம்.

PREV
16
வெளிறிய சருமம்

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, சருமம் வெளிறிப் காணப்படும். இது சருமத்தின் பொலிவை இழக்கச் செய்யும்.

26
மூச்சுத்திணறல்

உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த அறிகுறியை அலட்சியம் செய்ய வேண்டாம்.

36
தலைவலி

மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காதபோது, இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்பட்டு தலைவலியை உண்டாக்குகிறது.

46
ஆற்றல் குறைவு

உடலில் போதுமான இரும்புச்சத்து இல்லையெனில், திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்தி குறையும். இது ஆற்றல் குறைவுக்கு வழிவகுக்கும்.

56
குளிர்ச்சி உணர்வு

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது, கைகள் மற்றும் கால்களில் எப்போதும் குளிர்ச்சி உணரப்படும்.

66
பாதங்களில் வலி

தொடர்ச்சியாக கால் முட்டிகள் மற்றும் பாதங்களில் வலி ஏற்பட்டால் கவனிக்கவும். இது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories