இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் எல்லா வயதினரும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அதுவும் குறிப்பாக மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக ஏற்படும். இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபடலாம். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
நிறைய தண்ணீர் குடியுங்கள்!
வெயில் காலம் மட்டுமல்ல குளிர்காலத்திலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் காலை தூங்கி எழுந்ததுமே ஒரு கிளாஸ் சூடான நீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி ஜீரண சக்தியை எளிதாக்கும் இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். முக்கியமாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிப்பதை பழக்கமாக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
36
சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள் :
குளிர்காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனைதான் அதிகரிக்கும். எனவே குளிர்காலத்தில் நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதுபோல ஆப்பிள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கீரை வகைகள் போன்ற குளிர்கால பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் வழங்கும். குறிப்பாக காலையில் எளிதாக மலம் கழிக்க உதவும்.
மலச்சிக்கலுக்கு நாம் சாப்பிடும் உணவு மட்டுமல்ல தாமதமாக தூங்கினாலோ செரிமானம் மண்டலம் மோசமாக பாதிக்கப்படும். எனவே ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் குறையும், செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்.
56
வைட்டமின் டி :
பொதுவாக குளிர்காலத்தில் உடல் அதிக சோர்வாக இருக்கும். இதனால் வாக்கிங் செல்வதைக் கூட சிலர் நிறுத்தி விடுவார்கள். ஆனால் இப்படி இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தான் அதிகரிக்கும். எனவே வெளியில் வாக்கிங் செல்ல முடியாவிட்டாலும் தினமும் காலை எழுந்ததும் சூரிய ஒளியில் சிறிது நேரம் நில்லுங்கள். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். குடல் ஆரோக்கியமும் மேம்படும்.
66
சாப்பாட்டை தவிக்காதே!
குளிர்காலத்தில் பசி எடுக்கவில்லை என்று சாப்பிடாமல் இருக்கீங்களா? ஆனால் இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் குடலில் அமில உற்பத்தி அதிகரிக்க தொடங்கும். இதனால் வயிற்றில் வாயு உற்பத்தி அதிகரித்து தேங்க ஆரம்பிக்கும். பிறகு இது வாத, பித்த, கப சமநிலையின்மையை ஏற்படுத்தும். எனவே, தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள்.
மேலே சொன்ன விஷயங்களை தினமும் பின்பற்றி வந்தால் குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரவே வராது.