Foods For Men's Health: ஆண்களே! 30 வயசுக்கு மேல 'கட்டாயம்' இந்த உணவுகளை சாப்பிடுங்க! ஆரோக்கியமா வாழ இதுதான் வழி

Published : Dec 23, 2025, 03:09 PM IST

30 வயதிற்கு மேலான ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 உணவுகள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம். 

PREV
16
Foods For Men's Health

பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் வயது அதிகரிக்கும் போது தான் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் வரும். அதுவும் பெண்களைப் போல ஆண்களும் நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திப்பர். அந்த பிரச்சினைகளை தவிர்க்க வேண்டுமானால் சாப்பிடும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்களது உணவில் கட்டாயம் இந்த 5 உணவுகளை சேர்க்க வேண்டும். அவை என்னென்ன அவற்றின் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
பூசணி விதைகள் :

பொதுவாக 30 வயதிற்கு பிறகு நிறைய ஆண்கள் முடி உதிர்ந்து வழுக்கை தலை பிரச்சினையை சந்திக்கின்றன. வழுக்கு விழாமல் இருக்க தினமும் 1 ஸ்பூன் பூசணி விதைகள் சாப்பிட வேண்டும். ஏனெனில் பூசணி விதையில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், ஜிங்க் உள்ளன. இவை வழுக்கை தலைக்கு வழிவகுக்கும் ஹார்மோனை தடுக்க உதவும். பூசணி விதையை வறுத்தோ அல்லது பழங்கள் மேல் தூவி சாப்பிடலாம்.

36
ஆளி விதைகள் :

வயது அதிகமாகும் போது உடலில் மெட்டபாலிசம் குறையும் இதனால் உடலில் கொழுப்புகள் படிந்து குறிப்பாக வயிற்றில் குவிந்து தொப்பையை உண்டாக்கும். தொப்பையை கரைக்க ஆளி விதைகள் சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து, லிக்னன்கள் அதிகமாக உள்ளன. இவை ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை தயிர் அல்லது ஸ்மூத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

46
அஸ்வகந்தா :

அஸ்வகந்தாவில் வித்தானோலைடுகள் அதிகமாக உள்ளன. இது வயது அதிகரிக்கும் போது ஏற்படும் பாலுணர்வு பிரச்சினையை குறைக்க உதவும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு அஸ்வகந்தா மாத்திரையை சூடான நீர் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடவும்.

56
பீட்ரூட் :

30 வயதிற்கு பிறகு ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சினையை சந்திக்கின்றனர். இதை தவிர்க்க பீட்ரூட் சாப்பிடலாம். பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளதால் இது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு அளவை அதிகரித்து விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எனவே தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள்.

66
முருங்கை பொடி :

வயது அதிகரிக்கும் போது உடல் சோர்வு ஏற்படுவது பொதுவானது. இதை தவிர்க்க முருங்கை பொடி சாப்பிடலாம். இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் அவை உடல் சோர்வை எதிர்த்து போராடி உடலில் ஆற்றலை அதிகரிக்கும். இதற்கு தினமும் ஒரு கிளாஸ் சூடான நீரில் 1/2 ஸ்பூன் முருங்கை பொடியை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories