அல்சைமர் நோய் வருவதற்கு இந்த வைட்டமின் குறைபாடு தான் காரணம்.. அதை தடுக்க சில வழிகள் இதோ..

First Published Feb 3, 2024, 7:02 PM IST

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் டி தான் அல்சைமர் நோய் சீக்கிரமே வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. முழுவிளக்கம் உள்ளே...

ஆரோக்கியமாக இருக்க, நம் உடல் சரியாக செயல்பட நிறைய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கண்டிபாக தேவை. இந்த சத்துக்கள் சரியான நேரத்தில் உடலுக்கு கிடைக்காவிட்டால், உடலில் அவற்றின் குறைபாடு பல நோய்களை உண்டாக்கும். அத்தகைய ஒரு நோய் தான் வயது அதிகரிக்கும் போது ஏற்படும் 'நினைவாற்றல் குறைபாடு' ஆகும். 
 

இது மருத்துவ பெயரில், 'அல்சைமர்' நோய் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் வயது அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. அதாவது, 50 வயதுக்கு பிறகு வரும். முக்கியமாக இது பெண்களை விட ஆண்களுக்கு இந்த நோய் மிகவும் பொதுவானது.
 

உங்களுக்கு தெரியுமா..வைட்டமின் டி குறைபாடு அல்சைமர் நோயையும் ஏற்படுத்தும். அல்சைமர் நோய்க்கு குடும்ப வரலாறு, ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் மற்றும் மன உளைச்சல் போன்ற பல காரணிகள் உள்ளன. ஆனால் வைட்டமின் டி தான் இந்த நோய் சீக்கிரமே வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
 

வைட்டமின் டி நம் உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின். நமது உடலை ஆரோக்கியமாகவும், எலும்புகள் வலுவாகவும், பற்கள் ஆரோக்கியமாகவும், மன ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் முக்கியம். இதன் குறைவினால் எலும்புகளில் வெற்றிடம் போன்ற பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். 

இதையும் படிங்க  நாக்கில் இந்த அறிகுறிகள் இருக்கா...அப்போ ’வைட்டமின் டி’ குறைபாடு தான் காரணம்..!

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது நமது உடலில் உள்ள எலும்புகள் மிகவும் குழிவாக இருக்கும் பிரச்சனை. ஒரு சிறிய அதிர்ச்சியில் கூட அது உடைந்து விடுமோ என்று பயப்படும் இருக்கும். அதுபோல தான், வைட்டமின் டி குறைபாடு அல்சைமர் நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:  உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கா? அப்போ கண்டிப்பாக காளான் சாப்பிடுங்க..!!

ஆனால் நம் உடல் வைட்டமின் டியை தானே உற்பத்தி செய்யாது. சூரிய ஒளியில் இருந்து நமக்கு நிறைய வைட்டமின் டி கிடைக்கிறது. ஆனால் இந்தியா போன்ற போதுமான சூரிய ஒளி உள்ள நாட்டில் 70-80 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த எவ்வாறு சரிசெய்வது?
வைட்டமின் டி நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அதன் குறைபாட்டைப் போக்க, தினமும் வெயிலில் உட்கார வேண்டும். வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, பால், தயிர், முட்டை, சோயாபீன்ஸ், பீன்ஸ் போன்றவையாகும். இது தவிர, வைட்டமின் டி கொண்ட சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலமும் அதன் குறைபாட்டை ஈடுசெய்யலாம்.

click me!