கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களை மட்டுமல்ல, தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இச்சமயத்தில் மேக்கப் பொருட்களை பயன்படுத்தும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாத மேக்கப் பொருட்களை குறித்து இங்கே பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது:
வாசனை திரவியம்:
கர்ப்ப காலத்தில், பெண்கள் டியோடரன்ட் மற்றும் வாசனை திரவியம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றை தயாரிக்கும் போது ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் பிறக்கப்போகும் குழந்தைக்கு மோசமான பாதிப்பு ஏற்படும். மேலும் இது பெண்களுக்கு தோல் ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
லிப்ஸ்டிக்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள ஈயம் சிறிது நேரம் கழித்து உங்கள் உடலுக்குள் செல்கிறது. இது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் தான் கர்ப்ப காலத்தில் பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க வேண்டும்.
ஹேர் ரிமூவர் கிரீம்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஹேர் ரிமூவர் கிரீம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் ரசாயனம் நிறைந்துள்ளதால் இதை பயன்படுத்தும் போது தோல் அலர்ஜி ஏற்படும்.
ஹேர் டை:
பெண்கள் பெரும்பாலும் தங்கள் நரை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில், பெண்கள் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் ல் இருக்கும் அம்மோனியா சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.