பெரும்பாலானோர் டீ விரும்பி குடிப்பது உண்டு. சொல்லப்போனால் பலர் தங்களது நாளை டீ குடிப்பது மூலம் தொடங்குகின்றன. ஒருவேளை அவர்கள் டீ குடிக்கவில்லையென்றால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பதாக உணருகீறார்கள் என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால் உங்களுக்கு தெரியுமா நாம் அதிகமாக தேநீர் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று. மேலும் டீ பிரியர்கள் தேநீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட முடிவு செய்தாலும், அது எளிதானது அல்ல. எனவே, டீ அருந்தும் பழக்கத்தை எப்படி முறியடிப்பது மற்றும் அதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொள்வோம்.
டீ குடிக்கும் பழக்கத்தை எப்படி கைவிடுவது?
நீங்கள் பழக்கமாக்கி கொண்ட சிலவற்றை திடீரென்று நிறுத்த சொல்வது மிகவும் சிரமம் தான். அதுபோல தான் டீ குடிக்கும் பழக்கும் இருக்கும் சிலருக்கு அதை விடுவது மிகவும் கடினம். மேலும் அது உங்கள் உடலை சேதப்படுத்தும். இதனால் உங்களுக்கு தலைவலி, சோர்வு, மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே நீங்கள் டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட நினைத்தால், படிப்படியாக டீ குடிக்கும் அளவைக் குறைக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை 2 குறைத்து படிப்படியாகக் குறைக்கவும்.
டீ அருந்தும் பழக்கத்தை விடுவதுப் கடினம் என்றால், பால் டீ-க்கு மூலிகை டீ மற்றும் ஆரோக்கியமான டீ போன்றவற்றை உட்கொள்ளலாம். மூலிகை டீயில் பல்வேறு இயற்கை பொருட்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தேநீர் பழக்கத்தை உடைக்க இது உதவுகிறது. மேலும் பலருக்கு மதியான வேளையில், டீ குடிக்கும் பழக்கம் உண்டு. எனவே நீங்கள் டீ குடிக்க நினைத்தால் மதிய வேளையில் தீக்கு பதிலாக ஜூஸ் குடிக்கலாம் இது உங்கள் செரிமான அமைப்பை சமநிலைப்படுத்தும்.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்: டீ உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே டீ குடிப்பதை நிறுத்தினால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
பற்களின் ஆரோக்கியம்: டீ, காபி போன்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்வது பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இது பற்களை வலுவிழக்கச் செய்வதோடு அவற்றின் நிறத்தையும் பாதிக்கிறது. காஃபின் கலந்த பானங்கள் பற்களின் எனாமலை சேதப்படுத்துவதோடு, பல் சிதைவுக்கும் வழிவகுக்கும். எனவே டீ குடிப்பதை நிறுத்தினால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பற்களும் பளபளப்பாக இருக்கும்.