Food and Health: இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீங்க! உடலுக்கு ஆபத்து..!!

First Published | Jul 19, 2023, 1:35 PM IST

பழங்களில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது உடலின் ph அளவை குறைக்கும் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது. ஏனெனில் அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணமாக, வயிற்றில் உள்ள அமிலங்கள் கரைந்து வயிற்றில் வாயு உருவாகும். செரிமானத்தை மந்தமாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

கொய்யா: பெரும்பாலும் மக்கள் இந்தப் பழத்தை சாப்பிடும் முன் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து சேர்த்து சாப்பிடுவர். உப்பு தாகத்தை தூண்டும் என்பதால், தண்ணீர் குடிக்காமல் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

Tap to resize

வாழைப்பழம்: இதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை சாப்பிட பின் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
 

பேரிக்காய்: பேரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அது இருமல் மற்றும் சளிக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

ஆப்பிள்: இதில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆப்பிள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் வாயு, அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் வயிற்றில் வீக்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மந்தமான உணர்வையும் உண்டாக்கும்.

மாதுளை: மாதுளையில் நீர்ச்சத்து அதிக அளவு உள்ளது. ஆகையால் இதனை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கும்போது அது அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: பழங்களை சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா? இது நிஜமா?

தர்ப்பூசணி: இந்த பழத்தை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் அது செரிமானத்தை மெதுவாக்கும். இது உடலில் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே தர்ப்பூசணி சாப்பிட்டபின் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

பப்பாளி: இது ஒரு சக்தி வாய்ந்த பழமாகும். இதில் நார்ச்சத்து நிரம்பி உள்ளது மற்றும் இது சிறந்த குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற நிலைமை ஏற்படலாம்.

Latest Videos

click me!