Lips Care Tips: ஆண்களே உதடு கருப்பாக இருக்கா? ரோஸ் மில்க் கலரில் மாற இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க..!!

Published : Jul 19, 2023, 07:16 PM ISTUpdated : Jul 19, 2023, 07:24 PM IST

சில ஆண்களின் உதடு கருமையாக இருக்கும். அவற்றை நீங்க இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்.

PREV
16
Lips Care Tips: ஆண்களே உதடு கருப்பாக இருக்கா? ரோஸ் மில்க் கலரில் மாற இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க..!!

பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, உதட்டின் கருமை யாருக்கும் பிடிக்காது. ஒருபுறம், பெண்கள் உதட்டில் இருக்கும் கருமை நீங்க தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஆண்களோ அதை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். கருமையான உதடுகள் மரபியல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில மருத்துவ நிலைமைகள் உட்பட பல காரணங்களால் ஏற்படலாம். இருப்பினும், பல வீட்டு வைத்தியங்கள் கருமையான உதடுகளைப் போக்க உதவும். அதன் படி, இத்தொகுப்பில் நாம் ஆண்களுக்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன. அதன் உதவியுடன் அவர்கள் கருமையான உதடுகளை அகற்றலாம்.

26

ஆண்களின் கருமையான உதடுகளை போக்க என்ன செய்ய வேண்டும்?
எலுமிச்சை சாறு: எலுமிச்சை ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவர் ஆகும் இது கருமையான உதடுகளை ஒளிரச் செய்யும். எலுமிச்சை சாற்றை உதடுகளில் தடவி சுமார் 15 நிமிடங்கள் விட்டு தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு தினமும் முயற்சிக்கவும்.

36

சர்க்கரை ஸ்க்ரப்: சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். உங்கள் உதடுகளில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின்னர் கழுவவும். இது உதடுகளை உரிக்கவும், இறந்த செல்களை நீக்கவும் உதவுகின்றது.
 

46

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது கருமையான உதடுகளை ஒளிரச் செய்யும். இரவில் படுக்கும் முன் பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் எழுந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு உதட்டில் உள்ள கருமை நீங்கும்.

இதையும் படிங்க: Dry Lips: பனிக்காலத்தில் உதடுகள் வறட்சியா? இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்!

56

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் குளிர்ச்சி மற்றும் பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உதடுகளில் நிறமியைக் குறைக்க உதவும். வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். தண்ணீரில் கழுவுவதற்கு முன் சுமார் 10 நிமிடங்கள் விடவும்.

66

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கருமையான உதடுகளை ஈரப்பதமாக்கி ஒளிரச் செய்யும். தூங்கும் முன், சிறிது பாதாம் எண்ணெயை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும்.

இதையும் படிங்க: ரோஜா இதழ் போல வறண்டு வெடித்த உதடுகளை மாற்றணுமா? கற்றாழை ஜெல்.. 1 துளி தேன் போதும்!! சூப்பர் டிப்ஸ்

மேலும் இந்த முடிவுகளைப் பார்க்க நேரம் ஆகலாம். அதே நேரத்தில், புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே இந்த பழக்கங்களை மாற்ற அறிவுறுத்தப்படுகிறது.

click me!

Recommended Stories