கழுத்து வலி தாங்க முடியலயா? குணமடைய சிம்பிள் டிப்ஸ்!!
தீராத கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.
தீராத கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.
Neck Pain Relief Tips : காலையில் புத்துணர்ச்சியுடன் எழும்போது அந்நாளை உற்சாகமாக தொடங்க நினைப்போம். ஆனால், சில சமயங்களில் தூங்கி எழும்போது ஒரு விதமான கழுத்து வலி வந்துவிடும். இது எதனால் வந்தது என்று கூட யோசித்தாலும், காரணம் ஏதும் அந்த சமயத்தில் தோன்றாது. வலி நம்மை வாட்டி வதைக்கும். இதே பிரச்சினையால் நீங்களும் அவதிப்படுகிறீர்கள் என்றால் அது குறித்து கவலை வேண்டாம். வீட்டிலேயே சில எளிய முறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை மற்றும் பின்பற்றினால் போதும் கழுத்து வலி விரைவில் குணமாகும். அது என்ன என்பதை குறித்து இப்போது பாத்க்கலாம்.
தூங்கி எழுந்த உடனேயே கழுத்து வலி வந்தால் உடனே எந்தவேலையும் செய்ய வேண்டாம் முதலில் உங்களது கழுத்தை மெதுவாக அசைக்கவும். இப்படி செய்வதன் மூலம் கழுத்து பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, வீக்கத்தை குறைக்க உதவும். இதற்கு முதலில் உங்களது தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு வலது பக்கமாக உங்களது கழுத்தை மெதுவாக திருப்ப வேண்டும். சில வினாடிகள் கழித்து இடது பக்கமாக திருப்புங்கள். இறுதியாக உங்களது தலையை மேலும் கீழுமாக மெதுவாக அசைக்க வேண்டும். இந்த எளிய பயிற்சி செய்வதன் மூலம் கழுத்து வலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
கழுத்து வலிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்க சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடம் கொடுக்கலாம் இதற்காகவே சந்தையில் ஒத்தடப் பைகள் விற்பனையாகின்றன. எனவே அவற்றை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களால் ஒத்தடப்பை வாங்க முடியவில்லை என்றால், ஒரு துண்டு அல்லது துணியின் உதவியுடன் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் அதை நனைத்து வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தினமும் மூன்று வேளை, 10 நிமிடமாவது இப்படி செய்து வந்தால் கழுத்து வலி குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த '5' ஆயில்ல ஒன்னு யூஸ் பண்ணுங்க..!
கழுத்து வலிக்கு நல்ல தீர்வு கிடைக்க சற்று இதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதாவது சூடான நீருடன் சிறிதளவு உப்பு கலந்து குளித்தால் கழுத்து வலி அது மட்டுமில்லாமல், வீக்கமும் குறையும். இப்படி குளிப்பதன் மூலம் கழுத்து பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: Neck pain: உங்களுக்கு நாள்பட்ட கழுத்து வலி இருக்கா....? சரிசெய்ய உதவும் 5 யோகா பயிற்சிகள்!
தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதை கழுத்தில் வலி இருக்கும் பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் கழுத்து தசைகள் தளர்ந்து, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
குறிப்பு : மேலே சொன்ன முறைகள் பின்பற்றியும் கழுத்து வலி தீவிரமாக இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.