வெறும் 30 நிமிட வாக்கிங்!! வெளிப்படையாக தெரியாத 6 நன்மைகள்!! 

வெறும் 30 நிமிடங்கள் தினமும் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். 

daily 30 minutes walking unbelievable health benefits in tamil mks

 Benefits of Daily 30-Minute Walks : தினமும் 30 நிமிடங்கள் நடப்பதால் நமது உடலில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் எத்தனை காலடிகள் நடக்கிறோம், எவ்வளவு வியர்வையில் நனைகிறோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தினமும் வெறும் 30 நிமிடங்கள் நீங்கள் நடைபயிற்சி செய்தால் உடலில் பல்வேறு அற்புத மாற்றங்கள் நிகழும். அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

daily 30 minutes walking unbelievable health benefits in tamil mks
எலும்பு முறிவை தடுக்கும்!

எடையை தாங்கும் மிதமான பயிற்சிதான் நடைபயிற்சி. நடக்கும் போது நம்முடைய எலும்புகள் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக இயங்குகிறது. இதனால் உடலில் இருந்து அதிக ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தினமும் நடக்கும்போது எலும்புகளின் அடர்த்தி மேம்பட உதவுவதால், வயதாகும்போது ஏற்படக்கூடிய ஆஸ்ட்ரோபோராசிஸ் என்ற எலும்பு முறிவு நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.  மனிதர்களின் எலும்புகூட்டிற்கு தேவையான சிறு உடற்பயிற்சிதான் நடைபயிற்சியாகும். 


மனச்சோர்வு நீங்க!

உங்களுடைய நாள் எரிச்சலாகவும், மனசோர்வுடனும் இருந்தால் 30 நிமிடங்கள் நடக்கத் தொடங்குங்கள்.  நடக்கும்போது மனநிலையை சீராக்கக் கூடிய எண்டோர்பின்களின் சுரப்பு தூண்டப்படுகிறது. இதனால் மனநிலை சீராக நல்ல உணர்வுகள் ஏற்பட்டு மன அழுத்தம், மனச்சோர்வு கவலைகள் நீங்கும். இதை ஒரு இலவச சிகிச்சை என்றே சொல்லலாம்.
 

ஆற்றல் பேங்க்!!

நடப்பதற்காக நீங்கள் அதிக ஆற்றலை இழப்பதாக நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் நடப்பதால் உங்களுடைய ஆற்றல் அதிகரிக்கிறது. நீங்கள் நடக்கும் போது ரத்த ஓட்டம் மேம்பட்டு செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் ஊட்டச்சத்துக்கள் கடத்தப்படுகின்றன. மதிய உணவிற்கு பின்னர் நீங்கள் நடப்பது உங்களை மந்தமான உணர்விலிருந்து வெளிக்கொண்டு வருகிறது. 

இதையும் படிங்க: வாழ்க்கையை மாற்றும் சைலண்ட் 'வாக்கிங்'- முக்கியத்துவமும் பலன்களும்!! 
 

நோய் காப்பு;

தினமும் 30 நிமிடங்கள் நடப்பதால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க முடிகிறது இதய நோய் பக்கவாதம் நீரழிவு வகை உள்ளிட்ட பல நோய்களை வராமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடை பயிற்சி உதவுகிறது சில புற்று நோய்களை வருமுன் காக்கவும் நடைபயிற்சி உதவும் கெட்ட கொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

இதையும் படிங்க: இந்த '1' வாக்கிங் விதி போதும்.. ஒரு நோய் கூட கிட்ட வரமுடியாது!! 

எடை கட்டுப்பாடு;

டயட், ஜிம் என கடுமையான செயல்பாடுகள் இல்லாமல் எளிதில் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு நடைபயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும்.  தினமும் நடைபயிற்சி செய்வதால் உடலில் உள்ள அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு, எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. சுறுசுறுப்பான நடைபயிற்சி கொழுப்பு கரையவும் உதவுகிறது.  உங்களுடைய கீழ் உடலில் பெரும்பகுதி வலுப்பட வாக்கிங் உதவும். உடலின் மையப்பகுதி (core), இடுப்புத்தசைகள் வலுப்படவும் உதவுகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!