heart attack
மாரடைப்புக்கான அறிகுறிகள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் அடிக்கடி அசவுகரியம் ஏற்படும். இந்த பிரச்னை சில நேரங்கள் அல்லது நிமிடங்கள் நெஞ்சுப் பகுதியில் நீடிக்கும். வலியுடன் கூடிய அழுத்தம், வெறும் அழுத்தம், வேதனை போன்றவை குறிப்பிட்ட இடங்களில் உருவாகும். இதனால் உடல் பலவீனமடைந்து, லேசான தலை சுற்றல், மயக்கம் வரும். உடல் முழுக்க வியர்த்துக் கொட்டும்.
காது காட்டும் அறிகுறியை காது கொடுத்து கேளுங்கள்
காது வழியாக தெரியவரக்கூடிய அறிகுறிகள் மூன்று நிலைகளில் உள்ளன. முதல் படிநிலை அறிகுறிகளாக நாம் பார்ப்பது, காது மடலில் ஒரு சிறிய அளவு சுருக்கம் இருக்கும். இரண்டாம் படிநிலையில் காது மடல் முழுவதும் மேலோட்டமான மடிப்புகளில் சுருக்கம் வரும். அதை தொடர்ந்து காது மடல் முழுவதும் மடிப்புகள் பாதிக்கு மேல் பரவும்.
யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்
ஆண்களில் 45 வயதை கடந்தோருக்கும், பெண்களில் 56 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் பிரச்னை, உடல் பருமன், நீரிழிவு நோய், ஊட்டச்சத்து குறைபாடு போன்றோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. புகைப் பொருட்கள் பயன்படுத்துவது, குடிப் பழக்கம், வேலையே செய்யாமல் சோம்பலுடன் இருப்பவர்கள், அதிகளவில் ஸ்ட்ரெஸ் கொண்டவர்கள், கெட்ட உணவுப் பழக்கம் கொண்டவர்கள் ஆகியோருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.
பலவீனமான ஆண்மைக் கொண்ட ஆண்களை கண்டறிவது எப்படி? இதோ 5 வழிகள்..!!
heart attack
மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள்
ஆரோக்கியமான வாழ்வியலுக்கு மாறுவது தான், மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஒரே வழி. சுத்தமான உணவுகளை சாப்பிடுவது, போதிய இடைவெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வது, ஸ்ட்ரெஸை மேலாண்மை செய்ய பழகிக்கொள்வது மற்றும் மற்ற உடல்நல பிரச்னைகளை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது போன்றவை வளமான இருதய நலனை வழங்கும்.
முதுகு வலி, மூச்சுத் திணறல் கூட புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்- முழு விபரம் உள்ளே..!!
சி.பி.ஆர் செய்ய பழகிக் கொள்ளுங்கள்
சி.பி.ஆர் என்பது மாரடைப்பு அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்படும் அவசரகால உயிர்காக்கும் செயல்முறையாகும். அதனால் இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது, இதயத்தை உந்துகிறது, சுவாசத்தை மீட்டெடுக்கிறது மற்றும் இதயத் துடிப்பு நின்றுபோன ஒரு நபரின் இதயத் துடிப்பை மீட்டெடுக்கிறது. மருத்துவ உதவி கிடைக்கும் வரை சி.பி.ஆர் செயல்முறையை செய்து வருவது பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.