உருளைக் கிழங்குகளை வெறுக்காதீர்கள்- இருதய நன்மைக்கு கிடைக்கும் அற்புதம்..!!

First Published | Oct 7, 2022, 8:47 PM IST

நம்மில் பலருக்கும் சைவ உணவுகளில் உருளைக் கிழங்கை மிகவும் பிடிக்கும். ஆனால் உடல் எடையைக் கூட்டும், வாயு பிரச்னையை உருவாக்கும் போன்ற காரணங்களால் பலரும் அதை சாப்பிடுவதை தவரிக்கின்றனர். ஆனால் உருளைக் கிழங்குகள் இருதய ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக உள்ளன. எந்த காய்கறிகளையும் நீங்கள் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால், அது உடலுக்கு கெடுதி தான். ஆனால் வேகவைத்த உருளைக் கிழக்குகள், ஆவியில் வேகவைத்து எடுத்த உருளைகள், உருளைக் கிழங்கு மசியல் போன்றவை அளவுடன் சாப்பிட்டுவது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மையை செய்கிறது.  பத்திய சாப்பாட்டை பின்பற்றுபவர்கள் கூட, உருளைக் கிழங்குகளை தங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
 

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

இருதய செயல்பாட்டுக்கு பொட்டாசியம் மிகவும் முக்கியமானது. இருதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து வெளியேற்றி, உடல் முழுவதுக்கும் கொண்டு செல்ல பொட்டாசியம் உதவுகிறது. அது இருந்தால் தான் இருதயம் துடிக்கும். உருளைக் கிழங்குகளில்  அது  மிகுதியாக உள்ளது. எனவே, உருளைக்கிழங்குகளை முறையாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனால் இருதய நோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 

கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது

உருளைக்கிழங்கில் கரையக்கூடிய நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக இருதயத்துக்கு நோய் ஏற்படுவதற்கான பாதிப்பு பாதியாக குறைகிறது.

Tap to resize

இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதை தாண்டியும் உருளைக் கிழங்குகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் மெக்னீசியம், நியாசின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 6 உள்ளிட்ட இருதய ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துகளை வழங்கும். தவிர, உருளைக்கிழங்கில் சோடியம் உள்ளடக்கம் குறைவாக உள்ளதன் காரணமாக, இருதயத்தை கடந்து மனித உடல் இயக்கத்துக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
 

சமைக்கும் முறையை கவனிக்க வேண்டும்

உடற்பயிற்சிகளை தவிர இருதய ஆரோக்கியத்துக்கு உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை நிறைந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது பல்வேறு வகையில் நன்மையை தரும். இந்தியாவில் உருளைக் கிழங்குகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட காய்கறியாக உள்ளது. பொரித்து, வறுத்து, சுட்டு எடுத்து சாப்பிடுவதன் மூலம், அதனுடைய சுவை கூடுகிறது. ஆனால் அப்படி நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் பிரச்னை தான். அதை சமைக்கிற முறையில் சமைத்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

Latest Videos

click me!