Home Remedies : அடிக்கடி தும்மல் வருதா? அப்போ இதை ட்ரைப் பன்னிப் பாருங்கள்!

First Published Oct 7, 2022, 5:02 PM IST

ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்ப்பதன் மூலமாக தும்மல் வருவதை தடுக்க முடியும். அதே நேரத்தில் சில வீட்டு வைத்தியங்களும் தும்மலிலிருந்து நம்மை விடுபட வைக்கிறது.

தூசி மற்றும் சளி ஆகியவற்றால் பலருக்கும் தும்மல் வருவது இயல்பு தான். சிலருக்கு காலை எழுந்த உடனோ, குளிர்காற்று படும்போதோ மற்றும் மாலை நேரத்திலோ தும்மல் வரும். பலவித காரணங்களால் நமக்கு தும்மல் வந்தாலும் தொடர்ந்து வரும்போது, அது நிச்சயமாக ஒருவரை சோர்வடையச் செய்யும். மேலும் இதன் காரணமாக மூக்கு ஒழுகுதல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல், நெஞ்செரிச்சல், தலைவலி மற்றும் தீவிரச் சோர்வு ஆகிய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்ப்பதன் மூலமாக தும்மல் வருவதை தடுக்க முடியும். அதே நேரத்தில் சில வீட்டு வைத்தியங்களும் தும்மலிலிருந்து நம்மை விடுபட வைக்கிறது.

மஞ்சள் கலந்த பால்

பாலில் மஞ்சளைக் கலந்து குடிப்பதால் சளிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மஞ்சளில் குர்குமின், அழற்சி எதிர்ப்புப்பொருள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் காரணமாகத் தான் காயங்கள் ஏற்படும் போது, அதில் மஞ்சள் வைத்தால் விரைவில் குணமாகிறது. மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் தும்மலிலிருந்து எளிதா விடுபட முடியும்.

இஞ்சிச்சாறு மற்றும் தேன்

உணவில் சுவையைக் கூட்டுவதற்கு இஞ்சி முக்கியப் பங்காற்றி  வருகிறது. இஞ்சியிலும், மஞ்சளைப் போன்றே அழற்சி எதிர்ப்புப் பொருட்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இஞ்சியை, தேனுடன் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மூச்சுத் திணறல் பிரச்னைக்கும் தீர்வை அளிக்கிறது. லெமன் டீ-யில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்தால் தும்மல் மற்றும் சளிப் பிரச்னைகள் முற்றிலுமாக குறையும்.

Jackfruit Seed: அற்பதப் பலன்களை அள்ளித் தரும் பலாக் கொட்டைகள்!

சிட்ரஸ் பழங்கள்

இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் உண்பது தான். ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்றவை நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் சிறந்த சிட்ரஸ் பழங்கள். இந்தப் பழங்கள் தும்மலை கட்டுப்படுத்துவதுடன், மூச்சுக்குழாய் பிரச்னைகளுக்கும் தீர்வைத் தருகிறது.

Mushroom: சிறிதளவு காளானில் இவ்வளவு சத்துக்களா!

ஆவிப் பிடித்தல்

மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகிய பிரச்னைகளுக்கு ஆவிப் பிடித்தல் மற்றுமொரு சிறந்த தீர்வாகும். அதீத சளிப் பிரச்னைக்கும் ஆவிப் பிடித்தல் சிறந்த தீர்வைக் கொடுக்கிறது. கொதிக்கின்ற தண்ணீரில் தைலம் அல்லது நீராவி மாத்திரையை போட்டு, தலையை துண்டால் மூடிக்கொண்டு ஆவிப் பிடிக்க, தும்மல் உள்ளிட்ட அனைத்து சளிப் பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வு கிடைக்கும்.

click me!