அழகு நிலையங்களில் முகம் மற்றும் கழுத்தை சுத்தம் செய்து, மசாஜ் செய்துவிட்டு, அதை தொடர்ந்து அப்ளை செய்யப்படும் பேக் தான் ஃபேஷியல். இம்மூன்று நடைமுறைகள் மட்டுமே ஃபேஷியலில் கடைப்பிடிக்கப்படுகிறது. டீன் ஏஜில், அதாவது 13 வயதுக்கு பிறகு உடலில் ஹார்மோன்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
இதன்காரணமாக முகத்தில் ஆங்காங்கே பரு தோன்றும். இதனால் சருமத்தை முறையாக சுத்தப்படுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். அதனால் 13 வயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு ஃபேஷியல் செய்வதை தொடரலாம். அடுத்தடுத்து செய்யப்படும் ஃபேஷியல் மூலம், முகம் எப்போதும் இளமையாகவும் வறட்சியில்லாமல் இருக்கும்.