Fitness Tips
முந்திரி
முந்திரியில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் நமது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புகள் ஆகும். இதனால், உடல் பலவீனம் குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கிறது. அதிலும், முந்திரி பெண்களுக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும். தினசரி ஒரு முந்திரியை பெண்கள் சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவானது நிலையாக கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும், நம் உடலில் ஹார்மோன் அளவை ஊக்குவிப்பதில் முந்திரி மிக முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு முந்திரி கொட்டையில் இருக்கும் அனாகார்டிக் என்ற அமிலம் தான் காரணம். முந்திரி கொட்டையில் இயற்கையிலேயே அனாகார்டிக் அமிலம் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் உடலுக்கு அதிக வலு சேர்க்கிறது.
ஒரு கைப்பிடி அளவு முந்திரியில் கிட்டத்தட்ட 20 மில்லி கிராம் வரை அனாகார்டிக் அமிலம் காணப்படுகிறது. எனவே, ஈஸ்ட்ரோஜன் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், தினந்தோறும் ஒரு முந்திரி என தாராளமாக சாப்பிட்டு வரலாம். ஆகவே, உங்களின் ஹார்மோன் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த வேண்டுமென்றால் ஒரு கால் கப் அளவுக்கு முந்திரி சாப்பிட மறக்காதீர்கள். இதன் அளப்பரிய பயன்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.