மஞ்சள் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஒரு சக்தி வாய்ந்த பண்பாகும். இது தவிர இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கல்லீரலை பாதுகாக்கவும் என பல ஆரோக்கிய நன்மைகளை மஞ்சள் நமக்கு வழங்குகின்றது.
24
மஞ்சள்
மஞ்சள் ஆரோக்கியமான மசாலா என்பதாலும், இதில் இருக்கும் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதாலும் இதை கிட்டத்தட்ட எல்லா உணவுகளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் சில உணவுகள் சமைக்கும்போது அதில் மஞ்சள் சேர்க்கக்கூடாது. ஆனால் நாம் விவரம் தெரியாமலேயே சேர்த்து விடுகிறோம். இதனால் மஞ்சள் அந்த உணவின் சுவையை மாற்றுவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்களையும் குறைத்துவிடும். அப்படி மஞ்சள் சேர்த்து சமைக்க கூடாது உணவு எதுவென்றால் அது கீரைதான். ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. கீரை சமைக்கும் போது அதில் மஞ்சள் ஏன் சேர்க்கக்கூடாது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கீரை சத்தான இலை காய்கறி ஆகும் இதில் பல வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன. கீரை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இட்டைக்கு சூழ்நிலையில் கீரை சமைக்கும்போது அதில் மஞ்சள் சேர்க்கக்கூடாது என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. ஏனெனில் மஞ்சள் கீரையின் உண்மையான சுவையை மாற்றிவிடும் மற்றும் கீரையில் இருக்கும் சத்துக்களை குறைத்துவிடும்.
வெந்தயக்கீரை பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் சுவை சற்று கசப்பாக இருக்கும். உங்களுக்கு தெரியுமா..இந்த கீரை சமைக்கும் போது அதில் மஞ்சள் சேர்க்கக்கூடாது. காரணம் மஞ்சளின் சுவையும் சற்று கசப்பாக இருக்கும், வெந்தயக் கீரையின் சுவையும் கசப்பாக இருக்கும். இவை இரண்டும் சேர்ந்தால், வெந்தயக்கீரை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது. இதன் காரணமாக தான் வெந்தயக் கீரையில் மஞ்சள் பயன்படுத்த மாட்டார்கள். அதுமட்டுமின்றி மஞ்சளின் சுவை மற்றும் நிறம் கீரையில் இருக்கும் இயற்கையான பண்புகளை அழித்துவிடும். எனவே எந்த கீரை சமைத்தாலும் இனி அதில் மஞ்சள் சேர்க்காதீர்கள்.