
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரெட்ரோ வாக்கிங் என சொல்லப்படும் பின்னோக்கி நடத்தல் முறையை பின்பற்றலாம். இந்த பின்னோக்கி நடக்கும் பழக்கம் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. அதிக ஆற்றல் தேவைப்படாத மிதமான பயிற்சி. இங்கு அதனுடைய ஏராளமான நன்மைகளை காணலாம்.
உடலில் ஏற்படும் தடுமாற்றங்களை சரிசெய்ய பின்னோக்கி நடக்கும்முறை உதவுகிறது. உடலை ஒருங்கிணைத்து கால்கள், இடுப்பு, கீழ் முதுகுடன் தசைகளை உறுதியாக்க இந்த பயிற்சி உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த உடலையுமே சமநிலையாக்க முடியும். வயதான காலங்களில் ஏற்படும் தடுமாற்றம், கீழே விழும் அபாயங்கள் போன்றவற்றை தடுக்க தொடர்ந்து பின்னோக்கி நடந்து பழகலாம்.
மூட்டு வலிமை:
முன்னோக்கி நடைபயிற்சி செய்வதை காட்டிலும் பின்னோக்கி நடப்பது மூட்டுகளுக்கு எளிதாக இருக்கும். இதனால் முழங்கால்கள், இடுப்பு பகுதி, கணுக்கால்களில் ஏற்படும் தாக்கம் குறைந்து அவை வலுப்பெறுகின்றன.
ரெட்ரோ வாக்கிங் தசைகளை வலுவாக்கும். பின்னோக்கி நடப்பதால் தொடையில் உள்ள தசைகள், எலும்புகள், பிட்டம், மைய தசைகள் ஆகியவை ஒரே நேரத்தில் இயங்குபடி வேலை செய்கிறது. இதனால் தசைகள் விரைவில் வலுவாகின்றன.
இதய ஆரோக்கியம்;
வயதாகும்போது இதயம் பலவீனமாகும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உங்களுடைய ஐம்பது வயதுகளில் தொடர்ந்து பின்னோக்கி நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும். வழக்கமான ரெட்ரோ வாக்கிங் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
ரெட்ரோ வாக்கிங் செல்வதால் உடலில் உள்ள அதிக ஆற்றல் செலவாகும். இதனால் அதிக கலோரிகளை எரிக்கப்பட்டு எடை இழப்பு துரிதமாகும். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டால் விரைவில் எடை குறையும்.
இதையும் படிங்க: 60 வயதுக்கு பின் பெண்கள் 'எத்தனை' காலடிகள் வாக்கிங் போகனும்? இதோ அறிவியல் உண்மை!!
கூன் போட்டு நடக்கும் நபர்களின் தோரணை கூட மாற இந்த பயிற்சி உதவும். பின்னோக்கி நடப்பதால் மேல் முதுகில் காணப்படும தசைகள் வலுப்படுகின்றன. இதனால் நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும். முதுகுவலி வரக் கூடிய வாய்ப்பு குறையும்.
நாள்பட்ட நோய்கள் தாக்கம்:
தினமும் ரெட்ரோ வாக்கிங் செல்வதை பழக்கப்படுத்தி கொண்டால் இதய நோய், வகை 2 நீரிழிவு நோய், சில வகையான புற்றுநோய்கள் கூட தடுக்கப்படும். ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தால் அது கட்டுக்குள் வர உதவும்.
இதையும் படிங்க: வயதானவங்க'எவ்வளவு' நேரம் நடக்கலாம்? 45 வயசுக்கு மேல வாக்கிங் போனா இப்படி 1 நன்மை இருக்கு
- நீங்கள் ரெட்ரோ வாக்கிங் செல்ல முடிவு செய்தால் முதல் நாளிலேயே வேகமாகவும் அதிகமான நேரத்தில் நடக்கவும் வேண்டாம் படிப்படியாக உங்களுடைய வேகத்தையும் கால அளவையும் அதிகரிக்க வேண்டும் முதல் வாரத்தில் 10 நிமிடங்கள் வரையில் பின்னோக்கி நடந்தால் போதுமானது ஒவ்வொரு வாரத்திற்கும் உங்களுடைய உடலை பொறுத்து கால அளவை நீடித்துக் கொள்ளலாம்.
- நீங்கள் நடக்கும் இடம் சமதளமாக, பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கரடு முரடான பரப்புகளை தேர்வு செய்யாமல் மென்மையான பரப்பின் மீது நடைபயிற்சி செய்யுங்கள்.
- நிமிர்ந்த தோரணையில் வயிற்றின் மைய தசைகளை ஈடுபடுத்தி மெதுவாக காலடி வைத்து நடங்கள்.
- வெறுமனே பின்னோக்கி மட்டும் நடக்காமல் வழக்கமான நடைபயிற்சிக்கு நடுவில் 10 நிமிடங்கள் பின்னோக்கி நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கும்.
- போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளில், கூட்டம் அதிகம் காணப்படும் பார்க்குகளில் இது மாதிரியான நடை பயிற்சி தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.