
நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். பெரியவர்கள் ஒவ்வொருவரும் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும் தண்ணீர் குடிக்க சரியான நேரத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் தவறான நேரத்தில் தண்ணீர் குடித்தால் அது நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆம் அதன்படி ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இடையில் தண்ணீர் குடிக்கலாமா.. வேண்டாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகிறது. இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இது செரிமானத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். நீங்கள் சாப்பிடும் போது அடிக்கடி இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அது பல உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா? ஆம் உண்மையில், செரிமான செயல்பட்டின் போது நாம் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவை உடைக்கும் வேலையைச் செய்யும். அத்தகைய சூழ்நிலையில், சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்துப்போக செய்யும். இதனால் செரிமான செயல்பாட்டில் மோசமான விளைவை ஏற்படுத்தும் வயிற்று தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த 'ஆபத்தான' நோய் வரும் ஜாக்கிரதை!
உடல் பருமன் அதிகரிக்கும் : சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் செரிமான சக்தி பலவீனமடைந்து உடல் பருமனை அதிகரிக்கும். நம்முடைய வயிறு ஆரோக்கியமாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியமில்லை. எனவே சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டாம்.
வாயு மற்றும் நெஞ்செரிச்சல் : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்தி விடுங்கள். ஏனென்றால், நீரானது வயிற்றின் மேற்பரப்பால் உறிஞ்சப்படுகிறது. அதாவது, செரிமானத்துக்கு தேவையான திரவம் கெட்டியாகும் வரை, இந்நீரானது உறிஞ்சும் செயல் முறையைத் தொடர்கிறது. இதனால் அஜீரணம், வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
அமிலத்தன்மை பிரச்சனை: சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் உணவு செரிமானம் ஆவதைத் தடுக்கும். வயிற்றில் செரிக்கப்படாது உணவு இருப்பதால், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நிபுணர்களின் கூற்றுப்படி உணவு ஜீரணிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் எனவே சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் காரமான உணவை சாப்பிட்டால் ஒரு மடக்கு மட்டும் தண்ணீர் குடிக்கலாம். நீங்கள் சரியான நிறத்தில் தண்ணீர் குடித்தால் உங்களது எடை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். மேலும் செரிமான அமைப்பும் வலுவாக இருக்கும். இதுதவிர அமிலத்தன்மை, வாயு பிரச்சனைகள் வரவே வராது.
இதையும் படிங்க: ஆப்பிள் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீங்க; இல்லன்னா டேஞ்சர் தான்!