
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவுமுறையில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை அல்லது ராகி இவை இரண்டிலும் கார்போஹைட்ரேட் ஆதாரமாக இருப்பதால் எது ஆரோகியத்திற்கு சிறந்தது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இப்போது இந்த பதிவில் கோதுமை மற்றும் ராகியின் ஊட்டச்சத்துக்களின் மதிப்புகள், கூடுதலாக சர்க்கரை நோயாளிகளுக்கு இவை இரண்டில் எது நல்லது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கோதுமையில் நார்ச்சத்து, புரதச்சத்து, பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றைக் கொண்டு பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், கோதுமையில் பசையம் உள்ளதால் இது சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக கோதுமையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
கேழ்வரகில் கால்சியம் இரும்புச்சத்து நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. முக்கியமாக, கேழ்வரகானது ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்தும் தன்மையைக் கொண்டது. இதில் விசேஷம் என்னவென்றால், கேழ்வரகில் பசையம் இல்லை.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடலாமா?
உண்மையில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் கோதுமை விட அவர்களுக்கு ராகி சிறந்தது என்று சொல்லலாம். ஏனெனில் ராகியில் கிளைசெமிக் ஆனது கோதுமை விட ரொம்பவே கம்மி. அதாவது இது ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக தான் உயர்த்துகிறது. மேலும் கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது தவிர கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமானத்தை மெதுவாக்கிய ரத்தத்தில் சர்க்கரை அளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தும். கூடுதலாக, ராகியில் பசையம் இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் வெல்லம் கலந்த டீ குடிக்கலாமா? உண்மை என்ன?
- சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அதாவது கேழ்வரகு இட்லி, கேழ்வரகு இடியாப்பம், கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு சப்பாத்தி போன்ற பல வகையான உணவுகளை தயாரித்து சாப்பிடலாம். இருப்பினும் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
- சர்க்கரை நோயாளிகள் ராகி அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு அவர்கள் சொல்லும் அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
- ராகியுடன் நீங்கள் பிற தானியங்கள் அல்லது பருப்புகளுடன் கலந்து சாப்பிட்டால் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும்.