
பாதாம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது எல்லா வயதினருக்கும் மிகவும் நன்மை பயக்கும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்து சாப்பிடலாம். சிலர் பாதாமை பாலாகவோ அல்லது ஸ்மூத்திகளாகவோ எடுத்துக் கொள்வார்கள். பாதாம் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். மீறினால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் சிக்கலை ஏற்படுத்தி ஆரோக்கியத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்த பதிவில் எந்தெந்த உணவுகளுடன் பாதாமை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலங்கள் உள்ளன. அதே சமயம் பாதாமில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் அது செரிமான பிரச்சனைகளில் ஏற்படுத்தும். இதனால் வாயு, வீக்கம், வயிற்றுவலி மற்றும் வயிற்று உப்புசம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், இது பாதாமில் இருக்கும் கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதில் தலையிடும். நீங்கள் இவை இரண்டையும் சாப்பிட விரும்பினால் வெவ்வேறு நேரங்களில் அவற்றை சாப்பிடுவது தான் நல்லது.
சிலர் பால் பொருட்களுடன் பாதாம் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் நீங்கள் பாதாம்மை ஒருபோதும் காபி, டீ அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். மேலும் பாதாம் மற்றும் பால் பொருட்களை ஒன்றாக சாப்பிடும் போது ஜீரணிப்பது கடினமாக இருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகளும் ஏற்படும். அதுபோல லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால் பொருட்களுடன் ஒருபோதும் பாதாமை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுபோல பால் பொருட்களில் கேசீன் என்னும் புரதம் உள்ளது. இது பாதாமில் இருக்கும் இரும்பு மற்றும் மெக்னீசிய தாதுக்களை உறிஞ்சுவதில் தலையிடும். ஆயுர்வேதத்தின் படி, பாதாம் மற்றும் பால் பொருட்களை ஒன்றாக சாப்பிட்டால் சளியை அதிகரிக்கும். அதுபோல சோயா பொருட்களுடனும் பாதாமை சேர்த்து சாப்பிட வேண்டாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாதாமில் இயற்கையாகவே ஆக்சலேட் உள்ளதால் பீட்ரூட், உருளைக்கிழங்கு, பசலைக்கீரை போன்ற ஆக்சலைட் அதிகம் உள்ள பிற உணவுகளுடன் பாதாமை சாப்பிட்டால் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்கும். உடலில் ஆக்சிலேட் அதிகமாக இருந்தால் அது கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும் மற்றும் உடலில் கால்சியம் உறிஞ்சிதலில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் பாதாம் சாப்பிட விரும்பினால் ஆக்ஸிலேட் உணவுகளுடன் சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பாதாமில் இயற்கையாகவே சில இனிப்பு வகைகள் உள்ளதால் நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் சாப்பிட்டால், அது உங்களது வளர்ச்சியை மாற்றத்தையும், ரத்த சர்க்கரை அளவையும் மோசமாக பாதிக்கும். பாதாமில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும். மேலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையானது, உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையானது நீண்ட கால வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இது பாதாமின் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளில் தலையிடும். முக்கியமாக பாதாமுடன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது எடை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: வெறும் பாதாம் இல்ல; தேனில் ஊற வச்சி சாப்பிடுங்க.. இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!
சிப்ஸ் பட்டாணி போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளுடன் பாதாமை சேர்த்து சாப்பிடக்கூடாது. அது சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தாலும் அதிகப்படியான உப்பு இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் உப்பில் சோடியம் அதிகமாக இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது தவிர வீக்கத்தையும் ஏற்படுத்தும். உப்பு அதிகம் உள்ள உணவுகள் பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதலில் தலையிடுகிறது. எனவே, உப்பில்லாத உணவுகளுடன் பாதாம் சாப்பிடுங்கள்.
மது பிரியர்கள் பாதாம் பருப்பை மது உடன் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால் இது வளர்ச்சியை மாற்றம் மற்றும் செரிமானத்தை மோசமாக பாதிக்கும். மேலும் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது தவிர இதனால் நீரிழிப்பு மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். அதுமட்டுமின்றி ஆல்கஹால் மற்றும் பாதாமில் அதிக கலோரி உள்ளதால், அவை எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் மது குடிக்க போகிறீர்கள் என்றால், பாதாமை அதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்.