முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை.. ஒரே தீர்வு 'பூண்டு' இப்படி யூஸ் பண்ணுங்க!!
பூண்டு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஒரு அருமருந்தாகும். பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வாரி வழங்குகின்றது. பூண்டு சமையலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். பூண்டை பச்சையாகவோ அல்லது பொடியாகவோ பயன்படுத்தினாகும் சரி அது முடி வளர்ச்சிக்கும், தலைமுடியின் பல பிரச்சினைகளை சரி செய்யவும் உதவுகிறது.
24
முடி வளர்ச்சிக்கு பூண்டி எவ்வாறு உதவுகிறது?
பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, துத்தநாகம், செலினியம், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூந்தி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும் பூண்டு முடி உதிர்வதை குறைத்து, முடி வளர்ச்சிக்கு அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளன. அதுபோல பூண்டில் இருக்கும் சல்பர் மற்றும் செலினியம் முடியின் தண்டுகளின் அமைப்பை வலுப்படுத்த உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
1. பூண்டில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுக்களால் ஏற்படும் உச்சந்தலை பிரச்சனைகளை சரி செய்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
2. பூண்டை பொடியாக்கி அதை உச்சந்தலையில் தடவினால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, பொடுகு பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.
3. தூண்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும்.
4. பூண்டு வைட்டமின் சியின் நல்ல மூலமாகவும் இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
44
தலைமுடிக்கு பூண்டை பயன்படுத்துவது எப்படி?
உங்களது தலைமுடி பிரச்சனையில் இருந்து விடுபட பூண்டை எண்ணெய்யாக பயன்படுத்தலாம். பூண்டு எண்ணெயில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கும் பண்புகள் உள்ளன. பூண்டு எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதற்கு சில பூண்டு பற்களை பேஸ்ட் போலாக்கி அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக சூடாக்கவும் பிறகு எண்ணையை ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தவும். ரெண்டு ஸ்பூன் எண்ணெயை எடுத்து உங்களது மிஷின் தலையில் மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.